மாருதியின் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

By Saravana

மாருதியின் புதிய டீசல் எஞ்சின் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் ஒய்9டி என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் மாருதியின் முதல் மினி டிரக்கில் இந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது.

மினி டிரக்கை தொடர்ந்து, அடுத்தடுத்து தனது பட்ஜெட் கார்களில் இந்த புதிய டீசல் எஞ்சினை பொருத்த மாருதி திட்டமிட்டுள்ளதால், இந்த புதிய டீசல் எஞ்சின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய டீசல் எஞ்சின் குறித்த சில முக்கியத் தகவல்களை காடி இணையதளம் வெளியிட்டுள்ளது.


2 சிலிண்டர் எஞ்சின்

2 சிலிண்டர் எஞ்சின்

மாருதி எஞ்சினியர்களின் பங்களிப்புடன் சுஸுகி எஞ்சினியர்கள் இந்த புதிய டீசல் எஞ்சினை வடிவமைத்துள்ளனர். இது 2 சிலிண்டர்கள் கொண்ட 792சிசி எஞ்சினாக இருக்கும். மேலும், இது டர்போசார்ஜர் கொண்ட எஞ்சினாகவும் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

எடை இழுவை திறன்

எடை இழுவை திறன்

மாருதியின் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் புதிய மினி டிரக் 800 கிலோ எடை இழுவை திறன் கொண்டதாக இருக்கும். மேலும், சிறப்பான மைலேஜை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புரோட்டைப் மாடல்

புரோட்டைப் மாடல்

கடந்த ஆண்டு இறுதியில் ஒய்9டி மினி டிரக்கின் 2 புரோட்டோடைப் மாடல்களை சுஸுகி நிறுவனம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த 2 மினி டிரக்குகளையும் மாருதி எஞ்சினியர்கள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மாருதியின் முதல் மினி டிரக் விற்பனைக்கு வருகிறது. புதிய 792சிசி டீசல் எஞ்சின் மட்டுமின்றி, சிஎன்ஜி.,யில் இயங்கும் மாடலும் வருகிறது. அந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

டாடா ஏஸ் மற்றும் மஹிந்திரா மேக்ஸிமோ இலகு ரக வர்த்தக வாகனங்களுடன் மாருதியின் புதிய மினி டிரக் போட்டியிடும். மேலும், தற்போதுள்ள கார் டீலர்கள் வழியாகவே புதிய மினி டிரக்கை விற்பனை செய்வதா அல்லது மினி டிரக் விற்பனைக்கென தனியாக டீலர்களை நியமிப்பதா என்று மாருதி பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Maruti-Suzuki’s first self-developed diesel engine will be a 792 cc unit.
Story first published: Thursday, May 29, 2014, 8:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X