புதிய மெக்லாரன் 650எஸ் கார் அறிமுகம் - படங்கள், விபரங்கள்!!

By Saravana

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட, புதிய மெக்லாரன் 650 எஸ் கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய காரின் படங்கள் மற்றும் விபரங்களை மெக்லாரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. மெக்லாரன் 12சி கூபே, 12 சி ஸ்பைடர் மற்றும் பி1 கார்களுக்கு இடையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த கார் பி1 காரின் தோற்றத்தை அதிக அளவில் ஒத்திருக்கிறது. இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

மெக்லாரன் 12சி காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சினை 650 எச்பி ஆற்றலை அளிக்கும் வகையில், ட்யூன் செய்து இந்த காரில் பொருத்தியிருக்கின்றனர். 0- 100 கிமீ வேகத்தை 3 வினாடிகள் அல்லது குறைவான நேரத்தில் கடந்துவிடும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மெக்லாரன் 12சி காரின் மேம்படுத்த்ப்பட்ட மாடலைப் போன்றே இந்த கார் வந்துள்ளது. குறிப்பாக, ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏர்பிரேக்

ஏர்பிரேக்

இந்த கார் மூன்று இலக்க வேகத்தில் செல்லும்போது கூடுதல் டவுன் ஃபோர்ஸ் தேவைப்படும் வேளைகளில் ஏர் பிரேக் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் சிறப்பு தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பக்கவாட்டில் பெரிய ஏர் இன்டேக், 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் மஞ்சள் நிற பிரேக் காலிபர்கள் காருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது.

பட்டர் ஃப்ளை கதவுகள்

பட்டர் ஃப்ளை கதவுகள்

கல் விங் கதவுகள், சிசர் கதவுகள் இல்லாமல் இந்த காரில் பட்டர் ஃப்ளை கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 12சி கார் 1.76 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், 20,000 பவுண்ட் கூடுதல் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The latest McLaren 650S is based on its predecessor, McLaren MP4-12C. The car will be globally unveiled at 2014 Geneva Motor Show. The 650S will be propelled by a 3.8 litre turbocharged v8 engine, which will generate 650 HP. The latest offering will be slotted between McLaren 12C and P1.
Story first published: Tuesday, February 18, 2014, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X