அசத்தும் மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் ஸ்கெட்ச் வெளியீடு!

By Saravana

அமெரிக்காவின், கலிஃபோர்னியா நகரில் நடைபெற இருக்கும் மதிப்புமிக்க 2014 பெப்பிள் பீச் கான்கர்ஸ் டெலிகன்ஸ் ஆட்டோமொபைல் திருவிழாவில் மெக்லாரன் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய கான்செப்ட் மாடல் மெக்லாரன் பி1 காரின் ரேஸ் டிராக் மாடலாக வெளியிடப்பட உள்ளது. மெக்லாரன் பி1 ஜிடிஆர் என்ற பெயரில் வெளிவர இருக்கும் இந்த புதிய கார் மீதான உலகின் பார்வையை திருப்பும் விதமாக ஸ்கெட்ச் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Mclaren P1 GTR Sketch

ஃபார்முலா- 1 மற்றும் 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் ரேஸ்களில் இருக்கும் 50 ஆண்டுகால அனுபவத்தை வைத்துக் கொண்டு இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரை மிக அசத்தலாக டிசைன் செய்துள்ளனர் மெக்லாரன் நிறுவனத்தினர்.

மெக்லாரன் பி1 காரின் 375 யூனிட்டுகளும் உற்பத்தி முடிந்த கையோடு, இந்த புதிய காரையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய மெக்லாரன் முடிவு செய்துள்ளது. பி1 காரைவிட பி1 ஜிடிஆர் கார் சிறப்பான சாலை பிடிமானம், பெர்ஃபார்மென்ஸ், ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக இந்த கார் இருக்கும் என்று மெக்லாரன் தெரிவித்துள்ளது.

பின்புறத்தில் பெரிய ஸ்பாய்லர், ரியர் டிபியூசர், இரட்டைக் குழல் எக்சாஸ்ட் பைப்புகள் போன்றவை மிக குறிப்பிடும்படியாக உள்ளன. பி1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 3.8 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின்தான் இந்த புதிய பி1 ஜிடிஆர் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். பி1 காரின் எஞ்சின் 887 எச்பி பவரை அளிக்கும் நிலையில், பி1 ஜிடிஆர் காரின் எஞ்சின் 985 எச்பி பவரை அளிக்கும் விதத்தில் டியூனிங் செய்யப்பட்டிருக்கும்.

அடுத்த மாதம் 15ந் தேதி வெளியிடப்பட இருக்கும் இந்த புதிய மாடல் எத்தனை யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்பது குறித்த தகவலை மெக்லாரன் இதுவரை வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
The P1 GTR by McLaren is set for its debut at the Pebble Beach Concours d'Elegance 2014. It is going to be showcased as a concept and is a track focused model. However, if you cannot wait to see what the supercar will look like we have a sketch waiting for you.
Story first published: Thursday, July 31, 2014, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X