மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 45 ஏஎம்ஜி... என்ன விலை அழகே?!

By Saravana

இந்த ஆண்டு சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னிலை பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் படு தீவிரமாக இறங்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இதற்காக, ஏஎம்ஜி வெர்ஷனில் மிகக் குறைந்த விலை மாடலாக புதிய சிஎல்ஏ45 ஏஎம்ஜி காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

கூபே ஸ்டைலிலான இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் அழகிலும், ஆற்றலிலும் மயக்குகிறது. உலகின் அதிசக்திவாய்ந்த 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பம்சம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காம்பெக்ட் காரில் அதிக சக்திவாய்ந்த 4 சிலிண்டர் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இது உலகின் அதிசக்திவாய்ந்த 4 சிலிண்டர் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 360 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

 ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ்

இந்த காரில் ஏஎம்ஜியின் பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பத்திலான 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டிருக்கும். இது மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம் என பென்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டிவிடும். உச்சபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும்.

முன்பதிவு

முன்பதிவு

வரும் ஏப்ரலில் இந்த புதிய காருக்கு முன்பதிவு துவங்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

விலை

விலை

ஒரு கோடி ரூபாய் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Story first published: Friday, February 7, 2014, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X