விரைவில் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் அறிமுகமாகிறது!

By Saravana

உலக அளவில் பெரும் ஆவலை ஏற்படுத்திய பென்ஸ் ஜிஎல்ஏ காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடலும் விரைவில் இந்தியா வருகிறது.

வரும் 27ந் தேதி பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பெர்ஃபார்மென்ஸ் வகை எஸ்யூவி இந்திய இளைய கோடீஸ்வரர்களை பெரிதும் கவரும் அம்சங்களை கொண்டுள்ளது.


எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எந்திர உதவியின்றி முழுவதும் மனித ஆற்றலிலேயே கட்டமைக்கப்படுகிறது.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

பென்ஸ் ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி 4மேட்டிக் என்ற மாடலில் வெளியிடப்பட உள்ள இந்த புதிய சொகுசு காம்பேக்ட் எஸ்யூவியில் 1,991சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 360எச்பி பவரையும், 450என்எம் டார்க்கையும் அளிக்கும்.ஏஎம்ஜி ஸ்பீட்ஷிஃப்ட் டிசிடி 7 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

அதிகபட்சமாக மணிக்கு 249 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட இந்த மாடல் லிட்டருக்கு 15.98 கிமீ மைலேஜ் தரும் என்பது ஆச்சரியத் தகவல்.

போட்டி

போட்டி

ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 மாடல்களுக்கு போட்டியாக மிக சவாலான விலையில் இந்த புதிய மாடலை நிலைநிறுத்த பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான கூடுதல் தகவல்களை வரும் 27ந் தேதி டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles
English summary
On the 27th of October, 2014 Mercedes-Benz India will be introducing us to their power packed GLA 45 AMG 4MATIC. The German manufacturer had recently launched its first compact sedan in India the CLA45 AMG, which has been an instant hit with buyers.
Story first published: Wednesday, October 15, 2014, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X