ஹைட்ரஜனில் இயங்கும் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பென்ஸ்!

By Saravana

சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத வாகனங்களுக்கான மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பேட்டரியில் இயங்கும் கார்கள், ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் என அடுத்தக் கட்டத்துக்கு செல்வதற்கான முயற்சிகளில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

எளிதாக உற்பத்தி செய்யக்கூடியதும், சுற்றுச்சூழலுக்கு மாசு இழைக்காத ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே, பி கிளாஸ் மற்றும் சி கிளாஸ் ஹேட்ச்பேக் கார்களின் ஹைட்ரஜன் எரிபொருளாக கொண்டு இயங்கும் மாடல்களை அறிமுகப்படுத்திவிட்ட அந்த நிறுவனம் அடுத்ததாக எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கும் தகவல் கசிந்துள்ளது.

பென்ஸ் ஹைட்ரஜன் கார்கள்

பென்ஸ் ஹைட்ரஜன் கார்கள்

கடந்த 2010ம் ஆண்டு பி கிளாஸ் மற்றும் சி கிளாஸ் கார்களின் ஹேட்ச்பேக் மாடல்களில் ஹைட்ரஜனில் இயங்கும் மாடல்கள் F- Cell என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டன.

 சோதனை மாடல்கள்

சோதனை மாடல்கள்

பி கிளாஸ் மற்றும் சி கிளாஸ் கார்களின் ஹைட்ரஜன் மாடல்கள் சோதனை அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டன. இந்த கார்கள் வெற்றி பெற்றதோடு, சிறப்பான வரவேற்பையும் பெற்றுள்ளது.

 அடுத்து எஸ்யூவி

அடுத்து எஸ்யூவி

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் மோட்டாரிங் என்ற ஆட்டோமொபைல் இணையதளம், பென்ஸ் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் புதிய எஸ்யூவி மாடலை வடிவமைத்து வருவதாக தகவலை வெளியிட்டுள்ளது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைப் பிரிவு தலைவர் ஓலா கல்லேனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 2017ம் ஆண்டில் ஹைட்ரஜனில் இயங்கும் புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அது தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், F- Cell வரிசையில் முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பி கிளாஸ், சி கிளாஸ் கார்கள் போன்றே புதிய எஸ்யூவி மாடலும் சோதனை அடிப்படையிலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்து வெளியிடப்பட உள்ளது.

முதலீடு

முதலீடு

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்றும், ஆனால் ஹைட்ரஜன் கார்களுக்கு வரவேற்பு எந்தளவு அதிகரிக்கும் என்பதை இப்போதே கூற இயலாது என்றும் கல்லேனியஸ் கூறியுள்ளார்.

Most Read Articles
English summary

 Hydrogen fuel cell technology remains the most promising alternative means of powering vehicles that's cleaner than plug-in hybrids and more efficient fossil fuel.
Story first published: Thursday, March 20, 2014, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X