பட்ஜெட் எஃபெக்ட்... கார் விலையை குறைத்தது பென்ஸ்!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து, கார்களின் விலையை பென்ஸ் குறைத்துள்ளது. மேலும், மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பையும் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு மூலம் முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில் கார்களின் விலையை குறைத்துள்ளோம் என்று மெர்சிடிஸ் பென்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி கிளாஸ் விலை குறைந்தது

சி கிளாஸ் விலை குறைந்தது

பென்ஸ் சி கிளாஸ் காரின் விலை ரூ.55,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது பென்ஸ் சி220 அவா கிராண்ட் எடிசனுக்கு மட்டுமே பொருந்தும். இதுவரை ரூ.39.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட அந்த கார் மாடல் இனி ரூ.39.35 லட்சமாக விற்பனை செய்யப்படும்.

 பென்ஸ் இ கிளாஸ்

பென்ஸ் இ கிளாஸ்

இ கிளாஸ் காரின் இ250 சிடிஐ மாடலின் விலை ரூ. 76,000 குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 47.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மாடல் இனி ரூ.46.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

பென்ஸ் ஜிஎல் கிளாஸ்

பென்ஸ் ஜிஎல் கிளாஸ்

பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியின் விலை ரூ.2 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.74 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த எஸ்யூவி இனி ரூ.72 லட்சத்தில் கிடைக்கும்.

விலை குறைப்பு

விலை குறைப்பு

இந்த விலை குறைப்பு நடவடிக்கை மூலம் விற்பனையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
The luxury car manufacturer Mercedes Benz has been the No.1 choice in India for the rich and famous. With the latest budget by the F.M. of India and announcement in cut of excise taxes. The German manufacturer wants to share its joy, by slashing prices of their cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X