புல்லட் ப்ரூப் வசதியுடன் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் கார் அறிமுகம் - சிறப்பம்சங்கள்

By Saravana

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் புதிய புல்லட் ப்ரூப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தில் சாதாரண எஸ் கிளாஸ் மாடலைப் போன்று இருக்கும் இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பென்ஸ் எஸ் 600 கார்டு என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் காரில் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிக் குண்டு தாக்குதல்களிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தலைமுறை எஸ் கார்டு காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

இந்த அசத்தலான காரின் கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

உலகின் சிறந்த பாதுகாப்பு கார்

உலகின் சிறந்த பாதுகாப்பு கார்

இந்த புதிய கார் விஆர்9 பாதுகாப்பு தர அம்சங்களை கொண்டது. உலகிலேயே ஒருங்கிணைந்த உயர் பாதுகாப்பு கொண்ட முதல் கார் என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது.

பாடி பேனல்கள்

பாடி பேனல்கள்

உயர்ரக கட்டமைப்பு கொண்ட இந்த காரின் வலு குறைந்த பகுதிகளில் உயர்தர மெட்டல் ஷீட் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடிகளில் பாலிகார்பனேட் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தை தாங்கும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இடவசதி

இடவசதி

இந்த புதிய மாடல் 4 அல்லது 5 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கும். இரு இருக்கை வசதிகளிலும் 350 லிட்டர் பூட் ரூம் வசதி கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின்தான் இந்த புதிய தலைமுறை எஸ் கார்டு காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 530 பிஎஸ் பவரையும், 830 என்எம் டார்க்கையும் அளிக்கும். 7 ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 210 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அவசர காலங்களில் ஆபத்து நிறைந்த இடத்திலிருந்து விரைவாக வெளியேற முடியும்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

ஹைட்ராலிக் கண்ணாடி ஜன்னல்கள், அவசர காலத்தில் கேபினுக்குள் தூய காற்று தரும் வசதி, எச்சரிக்கை அலாரம், ரன் பிளாட் டயர்கள், தீ தடுப்பு சாதனம், சக்திவாய்ந்த பிரேக்குகள், ஏர்மாட்டிக் சஸ்பென்ஷன் போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 வைன்ட்ஷீல்டு

வைன்ட்ஷீல்டு

பிரத்யேக பாதுகாப்பு வசதி கொண்ட இதன் வைன்ட்ஷீல்டு 10 மிமீ தடிமனும், 135 கிலோ எடையும் கொண்டது.

சொகுசு, பாதுகாப்பு

சொகுசு, பாதுகாப்பு

சிறப்பான சொகுசு வசதிகள் மற்றும் உயர் பாதுகாப்பு வசதிகளை வழங்கும் இந்த கார் விவிஐபி.,அந்தஸ்துடையோரை வெகுவாக கவரும்.

Most Read Articles
English summary
German automobile manufacturers are popularly known for their build quality. Mercedes-Benz has been successful with their S-Class and provide more than adequate protection with it. However, now VIPs can opt for a bulletproof version of the vehicle.
Story first published: Thursday, August 7, 2014, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X