புதிய பென்ஸ் ஜிஎல்இ கூபே... அழகோ, அழகு... அம்புட்டு அழகு...!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்6 காரை அறிமுகம் செய்தபோது, அதன் டிசைனை பார்த்து வாடிக்கையாளர்களும், ஆட்டோமொபைல் துறையினரும் பிரம்மித்து போயினர். எஸ்யூவி, கூபே கார்களின் டிசைனை கலந்துகட்டி வடிவமைக்கப்பட்ட அந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றதையடுத்து, அடுத்ததாக எக்ஸ்4 காரையும் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.

இதே ரகத்தில் ஒரு புதிய காரை மெர்சிடிஸ் பென்ஸ் வடிவமைத்திருக்கிறது. அதுதான் ஜிஎல்இ கூபே. எஸ்யூவியின் கம்பீரமும், கூபே ரக கார்களின் அழகையும் நேர்த்தியாக சேர்த்து இந்த புதிய மாடலை வடிவமைத்துள்ளனர். ஜனவரி மாதம் டெய்ராய்ட் நகரில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோ மூலமாக இந்த புதிய கார் பொது தரிசனத்திற்கு வர இருக்கிறது. அட்டகாசமான இந்த காரின் புகைப்படங்களையும், கூடுதல் தகவல்களும் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

செய்தியின் தொடர்ச்சிய ஸ்லைடரில் காணலாம்.

முகப்புத் தோற்றம்

முகப்புத் தோற்றம்

ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் அதற்கான ஆக்சஸெரீகளை கொண்டதாக இருக்கிறது. புதிய முகப்பு கிரில் டிசைன், ஹெட்லைட், கிரில்லுக்கு நடுவில் இருக்கும் பட்டைக்கு நடுவில் பென்ஸ் நட்சத்திர சின்னம் ஆகியவை கவர்ச்சியை தருகின்றன. ஆஃப்ரோடு செல்லும்போது பாதுகாப்பை தரும் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டுத் தோற்றம்

முன்புறத்தில் எஸ்யூவி தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த காரின் பக்கவாட்டு தோற்றம் கூபே டிசைனுக்கு மாறிவிடுகிறது. முன்புறத்திலிருந்து கூரை பின்னோக்கி சரிந்து செல்கிறது. பெரிய 22 இஞ்ச் அலாய் வீல்களும், கிரவுண்ட் கிளியரன்ஸும் இதனை எஸ்யூவியாக காட்ட முயற்சிக்கின்றன. அதாவது, பேட்ஜை எடுத்துவிட்டு பார்த்தால் பிஎம்டபிள்யூ எக்ஸ்- 6தான் என்று கூறவிடலாமோ என்று தோன்றுகிறது.

கம்பீரம்

கம்பீரம்

முன்னர் எம் கிளாஸ் என்று அழைக்கப்பட்டு, தற்போது ஜிஎல்இ கிளாஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் குடும்பத்தின் சாயல்களும் தென்படுகின்றன. பாடி லைன்கள் மிக வலிமையான தோற்றத்தை காருக்கு தருகின்றது.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றமும் காரின் அழகை கூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர். பூட் லிட் மேலே ஏரோடைனமிக் லிப் கொடுக்கப்பட்டுள்ளது. டெயில் லைட்டுகள் காரின் டிசைனுடன் இயைந்து நிற்கின்றன. குரோம் பூச்சுடன் கூடிய டியூவல் எக்ஸ்சாஸ்ட் குழாய்களும் காரை ஸ்போர்ட்டியாக காண்பிக்கிறது. அத்துடன் அகலமான இந்த காரின் டயர்கள் காரின் கம்பீரத்தை பன்மடங்கு உயர்த்த உதவி செய்துள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மாடல் இரண்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் மாடலில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடல் 3.0 லிட்டர் வி6 எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 333 எச்பி பவரை அளிக்கும் ஜிஎல்இ400 என்ற மாடலிலும், 367 எச்பி பவரை அளிக்கும் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜிஎல்இ350டி டீசல் மாடலில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 258 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும்.

விலை

விலை

விலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. ஏராளமான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய கார் வாடிக்கையாளர்களை நிச்சயமாக வசீகரிக்கும் என்று கூறலாம். இந்தியாவில் பென்ஸ் மற்றும் ஏஎம்ஜி என இரு பிராண்டுகளிலும் புதிய கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே, இந்த புதிய கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று உறுதியாக நம்பலாம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டில் இந்தியாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz have now revealed their all new GLE coupe model. It will be officially showcased to the public at North American International Auto Show, which is scheduled in January, 2015 in Detroit. The German manufacturer has showcased its GLE 450 AMG coupe.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X