ஏப்ரல் முதல் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் உற்பத்தி துவங்குகிறது!

இந்தியாவில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் டீசல் மாடலின் உற்பத்தி வரும் ஏப்ரல் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.57 கோடி விலையில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் கார் இந்தியாவில் நேற்று விற்பனைக்கு வந்தது. பெட்ரோல் மாடலில் மட்டுமே எஸ் கிளாஸ் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

2014 Benz S Class

அதவும், முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த 125 கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதால், சம்பிரதாயமாக இந்த விழா நடந்தது. இறக்குமதி செய்து இந்த புதிய எஸ் கிளாஸ் கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அடுத்து எஸ் கிளாஸ் டீசல் காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ். எஸ்350 டீசல் காரின் வருகையை எதிர்பார்த்து பல கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் எஸ் கிளாஸ் டீசல் காரை இந்தியாவிலே அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்குகின்றன. தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ள பெட்ரோல் மாடலைவிட இது விலை குறைவாக வரும்.

மேலும், டீசல் கார்களுக்கு இந்தியாவில் சற்று மவுசு கூடுதல் என்பதோடு, எஸ் கிளாஸ் காருக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருப்பதை கவனத்தில் கொண்டு, டீசல் மாடலின் உற்பத்தியை முன்கூட்டியே பென்ஸ் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
The top of the line S500 variant of the S-Class luxury cars is imported by Mercedes from Germany. But a lower end diesel variant, the S350 CDI will be assembled in India, starting from April. The S350 CDi will be priced significantly lower than the INR 1.57 crore price tag the long wheelbase S500 petrol carries and will continue to fuel demand for the premium luxury sedan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X