முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் எஸ் கிளாஸ் கார்: பென்ஸ் ஆயத்தம்

By Saravana

பேட்டரியில் இயங்கும் எஸ் கிளாஸ் சொகுசு காரை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மெர்சிடிஸ் பென்ஸ் துவங்கியுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளில் தொடர்ந்து கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதிக மைலேஜ், குறைந்த கார்பனை வெளியேற்றும் வகையில், அந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து, ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் தொழில்நுட்பம் கொண்ட கார் தயாரிப்புகளுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான எஸ் 500 சொகுசு காரின் எலக்ட்ரிக் மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது.

ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த தகவலை பென்ஸ் நிறுவனத்தின் உயர் ரக சொகுசு கார்களுக்கான திட்டக் குழு தலைவர் உவே எர்ன்ஸ்ட்பெர்கர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த புதிய சொகுசு எலக்ட்ரிக் காரை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கான கால அளவு குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அடுத்த ஆண்டு எஸ் கிளாஸ் காரின் ஹைபிரிட் மாடலை பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பேட்டரியில் இயங்கும் எஸ் கிளாஸ் காரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, 740 எச்பி ஆற்றல் கொண்ட எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரையும், பி கிளாஸ் எலக்ட்ரிக் மாடலையும் பென்ஸ் தயாரித்துள்ளது. இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, இவற்றை விட சிறந்த செயல்திறன் கொண்ட பேட்டரி தொழில்நுட்பத்துடன் புதிய எஸ் கிளாஸ் காரின் எலக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

பென்ஸ் எஸ் கிளாஸ் எலக்ட்ரிக் காருக்கு தேவையான மிகச் சிறப்பான செயல்திறன் கொண்ட பேட்டரிகள் தற்போது இல்லை என்றும், அதனை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் உவே எர்ன்ஸ்ட்பெர்கர் கூறினார்.

சமரசம் இல்லை

சமரசம் இல்லை

எஸ் கிளாஸ் காரில் இருக்கும் வசதிகளை எதையும் இழக்காமல், அனைத்து வசதிகளையும் முழுமையாக அளிக்கும் வசதி கொண்ட சிறப்பான பேட்டரியை உருவாக்கி வருவதாகவும் பென்ஸ் தெரிவித்துள்ளது. புதிய எஸ் கிளாஸ் காரின் எலக்ட்ரிக் மாடல் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் மாடலை அடிப்படையானதாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அதன் மைலேஜ் மற்றும் ரேஞ்ச் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் ஹைபிரிட் மாடல் பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல், பேட்டரியில் இருக்கும் சார்ஜ் மூலம் 25 - 30கிமீ தூரம் வரை செல்லும்.

மைலேஜ்

மைலேஜ்

எஸ் கிளாஸ் காரின் ஹைபிரிட் மாடல் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் செல்லும் தூரம் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 115 கிராம் கார்பனை மட்டும் வெளியிடும்.

 பிற மாடல்கள்

பிற மாடல்கள்

எஸ் கிளாஸ் காரின் எலக்ட்ரிக் மாடல் மட்டுமின்றி, கன்வெர்ட்டிபிள் மாடலும் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

 தெஸ்லாவுக்கு போட்டி

தெஸ்லாவுக்கு போட்டி

புதிய எஸ் கிளாஸ் எலக்ட்ரிக் கார் தெஸ்லா காருக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz is already working on a plug-in hybrid version of the S-Class that should make its debut early next year. That's something we all knew. What's new is the German automaker is also very open to the idea of an all electric S-Class. OK, change that to, sure of building an all-electric S-Class.
Story first published: Monday, March 17, 2014, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X