புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எம்பிவி அறிமுகம்!

சொகுசு அம்சங்கள் நிறைந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மினி வேனாக காட்சியளிக்கும் இந்த புதிய சொகுசு எம்பிவி கார் முந்தைய வயானோ எம்பிவி காருக்கு மாற்றாக வந்துள்ளது. இந்த காரின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் உள்ளன.

விற்பனை?

விற்பனை?

வரும் மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய வி கிளாஸ் எம்பிவி கார் ஐரோப்பிய மார்க்கெட்டில் உடனடியாக விற்பனைக்கு வர உள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

ஸ்பெயின் நாட்டிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸின் விக்டோரியா ஆலையில் இந்த புதிய எம்பிவி கார் உற்பத்தி செய்யப்படும்.

 டிசைன்

டிசைன்

புதிய பென்ஸ் சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் காரின் டிசைன் அம்சங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டு டிசைன் எஸ் கிளாஸ் காரை ஒத்திருக்கிறது. ஒட்டுமொத்த கேபினின் தோற்றம் புதிய சி கிளாஸ் கார் போன்று இருக்கிறது.

 மாடல்கள்

மாடல்கள்

மூன்று விதமான வீல் பேஸ் மாடல்களில் இந்த புதிய கார் வர இருக்கிறது. மேலும், பென்ஸ் எம்பிவி கார்களில் மிக அதிக இடவசதி கொண்ட காராகவும் இது இருக்கும்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

வசதிகளை பொறுத்து வி கிளாஸ் மற்றும் வி கிளாஸ் அவன்த்கார்ட் ஆகிய இரு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

2+2+2 மற்றும் 2+3+3 ஆகிய இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் கிடைக்கும். இதுதவிர, கடைசி வரிசை இருக்கையை படுக்கை போன்று மாற்றிக் கொள்ளும் வசதியையும் கொண்டிருக்கும்.

கஸ்டமைஸ் வசதி

கஸ்டமைஸ் வசதி

இந்த காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களையும், கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்க இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

2.1 லிட்டர் டீசல் எஞ்சின் மூன்றுவிதமான ஆற்றல் கொண்ட மாடல்களில் கிடைக்கும். வி200சிடிஐ மாடல் 134 எச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் கொண்டிருக்கும். வி220 சிடிஐ மாடல் 161 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும். வி250 புளூடெக் மாடல் 187 எச்பி பவரையும், 440 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் இருக்கும். முதல் இரண்டு மாடல்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடனும், வி250 புளூடெக் மாடலில் 7ஜி டிரோனிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடனும் கிடைக்கும். பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.

Most Read Articles
English summary
Mercedes-Benz V-Class has been revealed, a beautiful looking MPV that combines driving pleasure and features of a Merc passenger car and the comfort and practicality only an MPV can provide.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X