ஒரே ஆர்டரில் 120 சி கிளாஸ் கார்களை சப்ளை செய்த மெர்சிடிஸ் பென்ஸ்!

கார்ஸ்ஆன் ரென்ட் வாடகை டாக்சி நிறுவனத்திடமிருந்து ஆர்டரின் பேரில் 120 சி கிளாஸ் சொகுசு கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

வாடகை கார் சேவை துறையில் முன்னிலை வகிக்கும் கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை செய்து வருகிறது.

Benz C Class

மேலும், சொகுசு கார் சேவையை விரிவுப்படுத்தவும் முடிவு செய்தது. தற்போது 800 சொகுசு கார்களை வைத்திருக்கும் இந்த நிறுவனம் புதிதாக 120 புதிய சொகுசு கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டது.

இதற்கான, ஆர்டரை சொகுசு தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்திடம் வழங்கியது. இதன்படி, 120 சி கிளாஸ் கார்களை கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனத்துக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒப்படைத்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆர்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனத்துக்கு சி கிளாஸ் காரின் சி220சிடிஐ என்ற டீசல் மாடல் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 2,143சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 170 பிஎச்பி ஆற்றலை வழங்க வல்ல இந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 14.83 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

Most Read Articles
English summary
German luxury car manufacturer Mercedes-Benz India has achieved another milestone. They have won the largest luxury car order from Carzonrent ever. 120 brand new Mercedes-Benz C-Class luxury sedan have been ordered by Carzonrent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X