மீண்டும் மேபக் பிராண்டில் புதிய காரை அறிமுகப்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ்!

By Saravana

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் உலகின் சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், எஸ் கிளாஸ் காரின் புதிய லிமோசின் ரக மாடலை விரைவில் துவங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

விற்பனை சரியில்லாததால் கைவிடப்பட்ட மேபக் ஆடம்பர கார் பிராண்டில் இந்த புதிய எஸ் கிளாஸ் லிமோசின் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்ய இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, எப்படி மெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் தனியாக புதிய ஏஎம்ஜி ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்ததோ, அதேபோன்று, மெர்சிடிஸ் - மேபக் என்ற புதிய பிராண்டில் இந்த புதிய எஸ் கிளாஸ் காரின் லிமோசின் ரக உயர்வகை மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

மெர்சிடிஸ் மேபக் எஸ்600 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் மாடலின் டீசரும், இன்டிரியர் படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ பொறிக்கப்பட்ட எஸ் கிளாஸ் காரில் மேபக் பிராண்டு பெயரும் இடம்பெற்றுள்ளது.

Maybach s600 Interiror

மெர்சிடிஸ் மேபக் எஸ்600 என்ற பெயரில் இந்த ஆடம்பர காரில் 530எச்பி பவரையும், 830என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மிகவும் பிரத்யேகமாக வர இருக்கும் இந்த புதிய ஆடம்பர கார் கோடீஸ்வரர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டிருக்கும் என்பதால் ஆவல் அதிகரித்துள்ளது.

இதுதவிர, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் அடிப்படையிலான புதிய எஸ்யூவி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. நவீன வசதிகள், சொகுசு, செயல்திறன் என அனைத்துவிதத்திலும் இந்த புதிய கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
German luxury automobile manufacturer will be launching their Mercedes-Maybach S600 limousine model at 2014 LA Auto Show. They will also be showcasing a SUV based on their S-Class. The S-Class SUV will be launched in 2016, however, they have revealed interiors of S600.
Story first published: Friday, November 14, 2014, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X