எக்கச்சக்க டிமான்ட்... இந்தியாவில் எஸ் கிளாஸ் உற்பத்தியை துவங்கும் பென்ஸ்!

By Saravana

சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்500 காருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருந்த அனைத்து கார்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த கார்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் எஸ் கிளாஸ்500 கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. புனேயில் நேற்று நடந்த சி கிளாஸ் கிராண்ட் எடிசன் அறிமுக விழாவில் இந்த அறிவிப்பை மெர்சிடிஸ் பென்ஸ் தலைவர் எபர்ஹார்டு கெர்ன் வெளியிட்டார்.

டிமான்ட் அதிகம்

டிமான்ட் அதிகம்

விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் எஸ்350 டீசல் மாடலைவிட தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எஸ்500 காருக்கு அதிக தேவை இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முதல்முறையாக...

முதல்முறையாக...

இந்தியாவில் முதல்முறையாக வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட காரை மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 உற்பத்தி துவக்கம்

உற்பத்தி துவக்கம்

வரும் ஏப்ரல் முதல் இந்தியாவில் எஸ்500 காரின் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேறுபாடு

வேறுபாடு

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் புதிய எஸ் கிளாஸ்500 காருக்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எஸ் 500 காருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. சாலைநிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு சொகுசான பயணத்தை வழங்கும் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்500 பெட்ரோல் மாடலில் 453 எச்பி ஆற்றலையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் கொண்டது. இது 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவுடம் என்பதோடு, மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டீசல் மாடலில் 254 எச்பி ஆற்றலையும், 620 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது பெட்ரோல் மாடலைவிட விலை குறைவாக இருக்கும்.

Most Read Articles
English summary
Having sold the entire first batch of S-Class S500 petrol sedans that were imported into India as completely built units Mercedes-Benz will soon begin local assembly of the S500 variant. It was previously thought that the second batch of S-Class sedans sold in India would be the locally built S350 diesel variant.
Story first published: Wednesday, January 29, 2014, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X