இந்தியாவில் 5 புதிய கார் மாடல்கள்: மிட்சுபிஷியின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் 5 புதிய கார் மாடல்கலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்துள்ளது. லான்சர், சிடியா செடான் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் மூலம் பிரபலமான அந்த நிறுவனம் தற்போது புதிய உத்வேகத்துடன் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் திட்டத்தில் உள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளில் இந்த புதிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று மிட்சுபிஷி நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பொது மேலாளர் கென் ஹொரினச்சி தெரிவித்துள்ளார்.

மிராஜ் கார்

மிராஜ் கார்

இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும், ஹூண்டாய் ஐ10, மாருதி செலிரியோ உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் விதத்திலான மிராஜ் ஹேட்ச்பேக் காரையும் இந்தியாவில் விற்பனை செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

 மிராஜ் எஞ்சின்

மிராஜ் எஞ்சின்

மிராஜ் காரில் 77 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். அதேவேளை, சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகமே.

அட்ராஜ் செடான் கார்

அட்ராஜ் செடான் கார்

மிட்சுபிஷி அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கும் 5 கார் மாடல்களில் அட்ராஜ் செடான் கார் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என கருதப்படுகிறது. 4.2 மீட்டர் நீளம் கொண்ட இந்த செடான் காரில் கத்தரி போட்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காராக களமிறக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கணிப்பு தெரிவிக்கின்றனர்.

காம்பெக்ட் செடான்

காம்பெக்ட் செடான்

மிராஜ் ஹேட்ச்பேக் காரின் செடான் மாடல் இது. எனவே, மிராஜ் காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் வரும். இது காம்பெக்ட் செடான் காராக நிலைநிறுத்தும் பட்சத்தில், ஹோண்டா அமேஸ், மாருதி டிசையர் போன்ற கார்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.

எஸ்யூவி மாடல்கள்

எஸ்யூவி மாடல்கள்

ஹேட்ச்பேக் மற்றும் காம்பெக்ட் செடான் கார்களை தவிர மீதமுள்ள மூன்றும் எஸ்யூவி மாடல்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், இரண்டு புத்தம் புதிய மாடல்களாக இருக்கலாம். புதிய தலைமுறை அவுட்லேண்டர் எஸ்யூவியும் மூன்றில் ஒரு மாடலாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mitsubishi is most well known in India for its sporty sedans, the Lancer and Cedia, which it no longer sells here, and its large, full size SUVs. That could soon change when the Japanese automaker brings its first hatchback to India in a couple of years.
Story first published: Tuesday, February 18, 2014, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X