கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகள்!

By Saravana

இந்த ஆண்டு கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகன பிராண்டுகள் மற்றும் மாடல்கள் குறித்த இரு தினங்களுக்கு படிதீர்கள். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டு மற்றும் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இருசக்கர வாகன பிராண்டில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இடம்பெறவில்லை. அதேபோன்று, கார் பிராண்டில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான மாருதி கார் நிறுவனம் இடம்பெறவில்லை. வாருங்கள் இந்தியர்களாஸ்லைடருக்கு செல்லலாம்.


7. டாடா ஸெஸ்ட்

7. டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட் கார் டாப் - 7 பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. எனினும், இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட மாடலில் ஸெஸ்ட் காரும் ஒன்று என்பது அந்த நிறுவனத்துக்கு பெருமைக்குரியது என்பதுடன், டாடா ஸெஸ்ட் வர்த்தகத்திற்கும் உறுதுணையான விஷயமே.

டாடா ஸெஸ்ட் முழு விபரம்!

6. ஹூண்டாய் எக்ஸென்ட்

6. ஹூண்டாய் எக்ஸென்ட்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடலான எக்ஸென்ட் ஆறாவது இடத்தில் உள்ளது. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வரும் ஹூண்டாய் எக்ஸென்ட் காரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி ரசித்திருப்பது இந்த பட்டியல் மூலம் தெளிவாகியுள்ளது.

எக்ஸென்ட் முழு விபரம்

5.லம்போர்கினி

5.லம்போர்கினி

சூப்பர் கார் பிராண்டுகளில் முதன்மையான விருப்பமாக விளங்கும் லம்போர்கினி கார் பிராண்டை இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளது கூகுள் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. டாப் - 7 பட்டியலில் லம்போர்கினி 5வது இடத்தை பெற்றிருக்கிறது.

லம்போர்கினி கார்கள் முழு விபரம்

4.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

4.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீது இருந்து வரும் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை என்பது இந்த பட்டியல் மூலம் தெளிவாகிறது. புதிய மாடல்கள் வந்தாலும் ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டை உடைப்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முழு விபரம்

3. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

3. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை பலர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததை இந்த பட்டியல் உணர்த்துகிறது. இதைப்போலேவ, விற்பனையிலும் புதிய ஸ்கார்ப்பியோ சாதித்து வருகிறது.

ஸ்கார்ப்பியோ முழு விபரம்

2.செவர்லே ஸ்பார்க்

2.செவர்லே ஸ்பார்க்

செவர்லே ஸ்பார்க் காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதே கூகுளில் அதிகம் தேடியதற்கான காரணமாக இருக்கலாம். இந்த மாதத்துடன் செவர்லே ஸ்பார்க் கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்திருப்பது நினைவுகூறத்தக்கது.

 1.ஹோண்டா மொபிலியோ

1.ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா மொபிலியோவை இந்தியர்கள் மிக மிக அதிகம் எதிர்பார்த்திருந்ததையும், அதன் மீதான ஈர்ப்பையும் இந்த பட்டியலில் முதன்மை பெற்றிருப்பது மூலம் தெரியவருகிறது. மாருதி எர்டிகாவை விட கூடுதல் இடவசதி, அதிக மைலேஜ் போன்ற சிறப்பம்சங்கள் கூறப்பட்டாலும், இந்தியர்கள் எதிர்பார்த்த விலை விஷயத்தில் ஹோண்டா சொதப்பியதால், இந்த புதிய காம்பேக்ட் எம்பிவி கார் பெரும் வெற்றியை நழுவவிட்டுள்ளது விற்பனை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது.

மொபிலியோ முழு விபரம்

Most Read Articles
English summary
Google has released India's most searched car brands in 2014. Have a look.
Story first published: Friday, December 26, 2014, 15:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X