2017ல் இந்தியா வரும் புதிய தலைமுறை ஃபியட் புன்ட்டோ, லீனியா கார்கள்!

By Saravana

வரும் 2017ம் ஆண்டில் புதிய தலைமுறை ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகச் சிறந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெயர் பெற்ற ஃபியட் புன்ட்டோ கார் இந்தியாவில் சரியான விற்பனை கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகளால் பின்தங்கியிருக்கிறது. இதேநிலைதான் லீனியாவுக்கும்.

Fiat Punto

இந்தநிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஃபியட் புன்ட்டோ கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புன்ட்டோ எவோ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் ஃபியட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

இதனிடையே, 2016ம் ஆண்டு புதிய தலைமுறை ஃபியட் புன்ட்டோ கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், புதிய தலைமுறை புன்ட்டோ காருடன், புதிய லீனியா காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இரு புதிய மாடல்களும் துருக்கியில் உள்ள ஃபியட் ஆலையில் முதலில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 2017ம் ஆண்டில் இந்த இரு கார் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. ஃபியட் 500 காரின் 5 டோர் மாடல்தான் புதிய புன்ட்டோவாக வர இருப்பதாக ஒரு யூகத்தகவலும் ஆட்டோமொபைல் துறையில் உலவி வருகிறது.

மேலும், புதிய தலைமுறை புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின்கள் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

Most Read Articles
English summary
Italian carmaker Fiat is working on the next generation Punto hatchback and Linea sedan, which is scheduled to make their global debuts in 2016-17. The company will launch the next-gen Linea and Punto hatch in India by the end of 2017. 
Story first published: Tuesday, November 11, 2014, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X