முதல் மாதத்திலேயே போட்டுத் தாக்கிய புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அசத்தியிருக்கிறது புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ.

கடந்த மாதம் 25ந் தேதி நவராத்திரி விழாவின் முதல் நாளில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைனில் மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வந்த புதிய ஸ்கார்ப்பியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Mahindra Scorpio Facelift

இந்தநிலையில், கடந்த மாதம் 6,060 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை விற்பனை செய்திருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, பழைய மாடல் மற்றும் புதிய மாடல் இரண்டையும் சேர்த்த விற்பனையாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிக அதிகம்.

கடந்த மாதம் 3,410 எஸ்யூவிகளும், 1,768 நிசான் டெரானோ எஸ்யூவிகளும் விற்பனையாகியுள்ளன. டாடா சஃபாரி மற்றும் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிகளின் மொத்த விற்பனை 742 யூனிட்டுகளாக இருந்தன.

முதல் மாதத்திலேயே புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் விற்பனை மிக சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்திருப்பது மஹிந்திரா நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Most Read Articles
English summary
In the month of September 2014, Mahindra Scorpio sales stood at 6,060 units, while that of Renault Duster were at 3,410 units, Nissan Terrano at 1,768 units and that of Safari (+ Storme) were at 742 units. Together, Duster, Terrano and Safari Storme sold 5,920 units in the month of September 2014.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X