ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 இடையில் புதிய ஆல்ட்டோ கார்: மாருதி திட்டம்

தற்போது விற்பனையில் நம்பர்-1 ஆக இருந்து வரும் ஆல்ட்டோ மாடல்களின் வரிசையில் புதிய மாடலை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆல்ட்டோ கே10 காரை விட குறைவான விலையில் புதிய மாடல் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


விலை

விலை

ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களுக்கு இடையிலான விலையில் புதிய ஆல்ட்டோ மாடல் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

புதிய ஆல்ட்டோ கார் முற்றிலும் புதிய மாடலாக இருக்காது. தற்போது விற்பனையில் உள்ள ஆல்ட்டோ கே10 காரின் ஹெட்லைட், டெயில் லைட், கிரில் மற்றும் பம்பர் போன்றவற்றில் மாற்றங்களை செய்து புதிய மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஆல்ட்டோ கே10 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஆல்ட்டோ கார் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது 68 எச்பி பவரும், 90 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

 தேர்வு எளிது

தேர்வு எளிது

ஒரே பெயரில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்வதால் விலை நிர்ணயத்திலும் பல குளறுபடிகள் ஏற்படலாம். அது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால், வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தபடி கார் தேர்வை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிறுத்தப்பட்ட பழைய ஆல்ட்டோ மாடலை திரும்பவும் கொண்டு வருகிறதா மாருதி என்ற சந்தேகம் நம் மனதில் எழுகிறது.

Most Read Articles
English summary
Rumour has it that Maruti Suzuki will introduce a new Alto model that will be placed between the original Alto and the Alto K10.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X