ரூ.3.90 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது மாருதி செலிரியோ - முழு விபரம்

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதியின் புதிய ஹேட்ச்பேக் காரான செலிரியோ இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூ.3.90 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள மாருதி செலிரியோவில் முதல்முறையாக கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய டிரான்ஸ்மிஷன் அமைப்பு கொண்டாதாக வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 2 மாடல்களில் கிடைக்கும்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

LXi, VXi, ZXi மற்றும் ZXi ஆப்ஷன் பேக் என வழக்கமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

 பேஸ் வேரியண்ட்

பேஸ் வேரியண்ட்

LXi பேஸ் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், ஹீட்டருடன் கூடிய ஏசி போன்ற வசதிகள் உண்டு.

 மிட் வேரியண்ட்

மிட் வேரியண்ட்

VXi மிட் வேரியண்ட்டில் பவர் விண்டோஸ், மேனுவல் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை உள்ளன.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்டில் பனி விளக்குகள், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

எடை

எடை

கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட செலிரியோ கார் 830 கிலோ எடை கொண்டது. இது EZDrive என்ற பெயரில் மாருதி அழைக்கிறது.

வடிவம்

வடிவம்

3,600 மிமீ நீளம், 1,600 மிமீ அகலம், 2,425 மிமீ வீல் பேஸ் கொண்டதாக மாருதி செலிரியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலான டிசைன்

ஸ்டைலான டிசைன்

ஏ- ஸ்டார், ஸென் எஸ்டீலோவுக்கு மாற்றாக வந்துள்ள இந்த கார் தோற்றத்தில் ஸ்டைலாகவும், உட்புறத்தில் இடவசதி மிக்கதாகவே தெரிகிறது.

 விலை விபரம்

விலை விபரம்

மேனுவல் டிரான்ஸ்மிஷன்

LXi - ரூ.3.90 லட்சம்

VXi - ரூ. 4.20 லட்சம்

ZXi - ரூ.4.50 லட்சம்

ZXi Optional pack- ரூ.4.96 லட்சம்

கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

VXi - ரூ.4.29 லட்சம்

ZXi - ரூ.4.59 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Most Read Articles
Story first published: Thursday, February 6, 2014, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X