புதுமையான 3 வீலரை அறிமுகப்படுத்திய போலரிஸ்!

By Saravana

ஏடிவி வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஒரு புதுமையான 3 வீலரை அறிமுகம் செய்துள்ளது. அதிசக்திவாய்ந்த இந்த மூன்று சக்கர வாகனம் பல்வேறு சிறப்பம்சங்களை தாங்கி வந்துள்ளது.

ஸ்லிங்ஷாட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய 3 வீலர் ஆட்டோமொபைல் பிரியர்களை பரவசப்படுத்தும் வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் போலரிஸ் ஸ்லிங்ஷாட் விபரங்களை காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய 3 வீலரில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.4 லிட்டர் ஈக்கோடெக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது இதன் எஞ்சின்.5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

முன்புறத்தில் இரண்டு 18 இஞ்ச் வீல்களும், பின்புறத்தில் ஒரு 20 வீலும் பொருத்தப்பட்டுள்ளது. பாலிமர் பாடி கொண்டுள்ளதால் துருப்பிடிக்காது என்றும், அதிக உறுதித்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த புதிய 3 வீலர் 771 கிலோ எடை மட்டுமே கொண்டது. இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதியுடன் இந்த புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விசேஷ இருக்கைகள்

விசேஷ இருக்கைகள்

இந்த ஓபன்டாப் வாகனத்தில் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட கிளவ் பாக்ஸ், யுஎஸ்பி, ரியர் வியூ கேமரா சப்போர்ட் செய்யும் 4.3 இஞ்ச் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

 விலை

விலை

இந்த புதிய மூன்று சக்கர வாகனம் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
American ATV vehicle maker Polaris has revealed a brand new 3 wheeler named as Slingshot.
Story first published: Wednesday, July 30, 2014, 10:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X