புதிய டாடா ஸெஸ்ட் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற நேரடி போட்டியாளர்கள் மட்டுமின்றி, பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கும் சவால் தரும் விலையில் புதிய டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது அறிமுக விலையாக என்றாலும், முன்பதிவில் முந்தும் வாடிக்கையாளர்கள் மிகச் சிறப்பான விலையில் இந்த காரை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் டாடா மோட்டார்ஸிடமிருந்து வந்திருக்கும் இந்த புத்தம் புதிய மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை தாங்கி வந்திருக்கிறது. அதில், முக்கிய சில சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய வர்த்தக கொள்கை

புதிய வர்த்தக கொள்கை

டிசைன்நெக்ஸ்ட், டிரைவ்நெக்ஸ்ட், கனெக்ட் நெக்ஸ்ட் என்ற டாடா மோட்டார்ஸின் புதிய வர்த்தக தாத்பரியத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் முதல் கார் மாடல் இது. அதேபோன்று, டிசைனிலும், வசதிகளிலும் டாடா மிகவும் கவனத்துடன் செயலாற்றி இந்த புதிய தயாரிப்பை வழங்கியுள்ளது.

டிசைன்

டிசைன்

இத்தாலி, இங்கிலாந்து மற்றும் புனே நகரில் உள்ள டிசைன் ஸ்டூடியோக்கள் இணைந்து இந்த புதிய காரை டிசைன் செய்துள்ளன.

 எஞ்சினியர்கள் டீம்

எஞ்சினியர்கள் டீம்

மொத்தம் 5 நாடுகளை சேர்ந்த 11 தொழில்நுட்ப மற்றும் டிசைன் மையங்களை சேர்ந்த 6,000 எஞ்சினியர்கள் மற்றும் வல்லுனர்கள் இந்த புதிய கார் வடிவமைப்புத் திட்டத்தில் பங்காற்றியுள்ளனர்.

ஜேஎல்ஆர் பங்களிப்பு

ஜேஎல்ஆர் பங்களிப்பு

டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் பொறியாளர்களும் இந்த காரின் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

 சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்த காரை 3 லட்சம் மணி நேரம் சோதனைகள் செய்து வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்துள்ளதாக ஸெஸ்ட் கார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆராச்சி மற்றும் மேம்பாட்டு மையத் தலைவர் டம் லிவர்டன் கூறினார்.

 ஹார்மன் சிஸ்டம்

ஹார்மன் சிஸ்டம்

இந்த காருக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஹார்மன் நிறுவனம் உருவாக்கித் தந்துள்ளது. டியூவல் டோன் இன்டிரியர், கிளைமேட் கன்ட்ரோல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 நேவிகேஷன் சிஸ்டம்

நேவிகேஷன் சிஸ்டம்

இந்த காருக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை மேப்மை இந்தியா பிரத்யேகமாக உருவாக்கி கொடுத்துள்ளது.

 எல்இடி லைட்டுகள்

எல்இடி லைட்டுகள்

காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் முதலாவதாக எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் டாடா ஸெஸ்ட் வந்துள்ளது. இதுதவிர, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய முகப்பு கிரில் போன்றவையும் முக்கிய டிசைன் அம்சங்கள்.

 ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

இந்த காரில் 366மிமீ விட்டம் கொண்ட ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் இதுவரை வெளியிட்ட கார் மாடல்களிலேயே இதுதான் மிகக்குறைந்த விட்டம் கொண்ட ஸ்டீயரிங் வீல் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

புதிய ஸெஸ்ட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் புத்தம் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூன்றுவிதமான டிரைவிங் ஆப்ஷன்களில் மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. இது 88.7 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். நகர்ப்புறம், நெடுஞ்சாலை என சாலைநிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். இந்த எஞ்சினுக்கான டர்போசார்ஜரை ஹனிவெல் நிறுவனமும், இன்ஜெக்டரை பாஷ் நிறுவனம் சப்ளை செய்கின்றன. மொத்தத்தில் 97 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு எஞ்சினாக குறிப்பிடப்படுகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் இருவித பவர் அவுட்புட் கொண்டதாக கிடைக்கும். 88.7 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் ஒரு மாடலும், மற்றொன்று 75 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்திலும் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். மேலும், இது குறைவான விலை கொண்ட டீசல் ஆட்டோமேட்டிக் காராகவும் கூறலாம்.

வீல் பேஸ்

வீல் பேஸ்

இந்த கார் 2,470மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் கேபினில் சிறப்பான இடவசதியை அளிக்கும். இந்த காரில் 5 பேர் செல்வதற்கான சிறப்பான இடவசதியை வழங்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பிளாட்டினம் சில்வர், ஸ்கை கிரே, பஸ் புளூ, ட்யூன் பீயேஜ், பிரிஸ்டைன் ஒயிட், வெனிடியன் ரெட் ஆகிய 6 வண்ணங்களில் புதிய ஸெஸ்ட் கார் கிடைக்கும்.

 வாரண்டி

வாரண்டி

டாடா ஸெஸ்ட் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான வாரண்டி, 3 ஆண்டுகள் அல்லது 45,000 கிமீ.,க்கான பராமரிப்பு திட்டத்தை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இதுதவிர, 3 ஆண்டுகளுக்கு அவசர சாலை உதவித் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

விற்பனையில் பெரும் சரிவை சந்தித்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த புதிய ஸெஸ்ட் கார் நிச்சயம் நல்லதொரு விற்பனை பங்களிப்பை தரும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை வைத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The Zest is the first all-new product based on Tata Motors' 'DesigNext, DriveNext, ConnectNext' philosophy. Here are given some interesting details of New Tata Zest sedan car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X