பவர்ஃபுல் ஹைபிரிட் மாடலாக தயாராகும் புதிய தலைமுறை நிசான் ஜிடிஆர்!

By Saravana

கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் உலக அளவில் நல்ல வரவேற்பை பதிவு செய்த மாடல். சரியான விலையில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டிசைன் கொண்ட மாடலாகவும் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

சச்சின் முதல் உசேன் போல்ட் வரை கவர்ந்த இந்த மாடல் தற்போது விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் நிலையில், 7 ஆண்டுகள் பழமையாகிவிட்ட இந்த மாடலுக்கு மாற்றான புதிய மாடலை களமிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிசான் தள்ளப்பட்டுள்ளது.


பணத்திற்கான மாடல் இல்லை...

பணத்திற்கான மாடல் இல்லை...

லாப நோக்குடன் மட்டுமே இந்த மாடலை உற்பத்தி செய்வதை நிசான் தலைவர் கார்ல் கோஸ்ன் விரும்பவில்லை. பிராண்டு மதிப்பை உயர்த்தும் விதத்தில் இந்த மாடல் இருக்க வேண்டும் என்றும், அதன்படியே நிலைநிறுத்த விரும்புகிறார். எனவே, நிசான் ஜிடிஆர் காரின் புதிய தலைமுறை மாடலை மிகச்சிறப்பான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்க கோஸ்ன் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, நிசான் பொறியாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் புதிய தலைமுறை ஜிடிஆர் காரை வடிவமைத்து வருகின்றனர்.

கான்செப்ட் மாடல்

கான்செப்ட் மாடல்

கடந்த ஜூனில் நடந்த குட்வுட் ஆட்டோமொபைல் திருவிழாவில் 2020 விஷன் கிரான் டூரிஷ்மோ என்ற கான்செப்ட் மாடலை நிசான் பார்வைக்கு வைத்திருந்தது. அந்த மாடலின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் புதிய நிசான் ஜிடிஆர் வடிவமைக்கப்பட உள்ளது.

 ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

தற்போது நிசான் ஜிடிஆர் காரில் 3.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிய தலைமுறை மாடலிலும் இந்த எஞ்சின் தனது பணியை தொடரும். ஆனால், புதிதாக எலக்ட்ரிக் மோட்டார்களும் சேர்க்கப்பட்டு கூடுதல் பவர் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், தற்போதைய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட உள்ளது.

பவர்

பவர்

புதிய தலைமுறை மாடலில் பொருத்தப்பட இருக்கும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் ஒன்றிணைந்து 134 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இதன்மூலம், புதிய மாடல் அதிகபட்சமாக 775 எச்பி பவர் கொண்டதாக வர இருக்கிறது.

அறிமுகம்?

அறிமுகம்?

புதிய தலைமுறை நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்படும். 2018ல் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்படும்.

Source: Motoring

Most Read Articles
English summary
A new generation Nissan GT-R is still in progress and in order to make a business case, it will be a hybrid. However, a Nissan inside source told Australian website Motoring that in order to keep costs down, the current twin-turbo 3.8-liter V6, transaxle layout and AWD powertrain will remain.
Story first published: Tuesday, September 23, 2014, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X