புதிய ஸ்கார்ப்பியோ பிளாட்ஃபார்மில் தயாராகும் புதிய பொலிரோ, ஸைலோ, குவான்ட்டோ மாடல்கள்!

By Saravana

கடந்த வாரம் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய ஸ்கார்ப்பியோ மாடல் மஹிந்திராவின் மூன்றாம் தலைமுறை லேடர் ஃப்ரேம் சேஸீ பயன்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், விரைவில் வர இருக்கும் மஹிந்திராவின் புதிய பொலிரோ, ஸைலோ, குவான்ட்டோ மாடல்களிலும் இதே சேஸீ பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


3ம் தலைமுறை லேடர் சேஸீ

3ம் தலைமுறை லேடர் சேஸீ

இந்த புதிய தலைமுறை சேஸீ 6 கிலோ குறைவான எடை கொண்டதுடன், ஸ்கார்ப்பியோவின் முந்தைய சேஸீயைவிட இருமடங்கு கூடுதல் உறுதித்தன்மை கொண்டது.

 மாடுலர் பிளாட்ஃபார்ம்

மாடுலர் பிளாட்ஃபார்ம்

இந்த புதிய ஏணி(லேடர்) அமைப்பு கொண்ட ப்ரேம் மூன்று பிரிவுகளை கொண்டதாக இருக்கிறது. இதில், நடுப்பாகத்தை தேவைக்கு தகுந்தவாறு மாறுதல்களை செய்து கொள்ளக்கூடிய மாடுலர் அமைப்பு கொண்டது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

முன்புறம் மற்றும் பின்புறத்தில் சஸ்பென்ஷனுக்கான அமைப்பு மற்றும் அளவீடுகளில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. எனவே, எதிர்காலத்தில் வரும் மஹிந்திராவின் புதிய மாடல்களும் இதே சேஸீயிலேயே கட்டமைக்கப்படும்.

 பொலிரோ

பொலிரோ

அடுத்த தலைமுறை மஹிந்திரா பொலிரோ இதன்மூலம் அதிகபட்ச பயனை பெறும் என்று மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான சாலைகளிலும் கூட மிகச் சிறப்பான கையாளுமை மற்றும் உறுதித்தன்மையை இந்த புதிய சேஸீ வழங்கும்.

ஸைலோ

ஸைலோ

இந்த மாடுலர் பிளாட்ஃபார்மை பயன்படுத்தி, மஹிந்திராவின் மூன்றாம் தலைமுறை லேடர் சேஸீயின் நீட்டிக்கப்பட்ட மாடலில் புதிய ஸைலோ கட்டமைக்கப்பட உள்ளது. இதனால், புதிய ஸைலோவின் மூன்றாவது வரிசை இருக்கை மிகச் சிறப்பான இடவசதி கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

புதிய ஸ்கார்ப்பியோவின் சேஸீ அமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய பொலிரோ, ஸைலோ மாடல்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய குவான்ட்டோவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உற்பத்தி செலவீனம்

உற்பத்தி செலவீனம்

மாடுலர் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் மாடல்கள் மூலம் உற்பத்தி செலவீனம் வெகுவாக கட்டுப்படுத்தப்படும். இதனால், சரியான விலையில் தொடர்ந்து மஹிந்திராவின் தயாரிப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
According to reports, The new Mahindra Scorpio platform will also underpin the upcoming Xylo, Bolero and Quanto models.
Story first published: Monday, September 29, 2014, 10:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X