டட்சன் கோ வந்துமா நிசானுக்கு இந்த நிலைமை?!

By Saravana

டட்சன் கோ கார் வந்த பிறகும் நிசான் கார் நிறுவனத்தின் விற்பனை வெளியில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கடந்த மாதம் மொத்தம் 2900 கார்களை மட்டுமே நிசான் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் கோ கார் விற்பனைக்கு வந்தது முதல் மாதத்திற்கு 1,500 முதல் 2,000 கார்கள் என்ற எண்ணிக்கையிலேயே இருக்கிறது. இதனால், எதிர்பார்த்த அளவு டட்சன் கோ காரின் விற்பனை இல்லை.

Datsun GO

இதேபோன்று, நிசான் நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையும் மிக மோசமாகவே இருந்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை இலக்கு வைத்து செயல்பட்டு வரும் நிசான் நிறுவனம் டட்சன் பிராண்டை பெரிதாக நம்பியிருக்கிறது.

ஆனால், டட்சன் கோ காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பது அந்த நிறுவனத்தை சோர்வடையச் செய்துள்ளது. மேலும், மைக்ரா மற்றும் சன்னி போன்ற கார்களின் டிசைன் இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை என்று நிசான் தெரிவித்துள்ளது.

இருப்பு அதிகரித்து வருவதையடுத்து, இந்த மாதத்தில் கார் உற்பத்தியை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது. மார்க்கெட் நிலவரம் மிக சவாலாக இருப்பதாகவும் நிசான் கருத்து தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan has launched 3 new products in the past 6-9 months, but could only muster volumes of 2,900 units this July. 
Story first published: Friday, August 8, 2014, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X