சென்னை, பெங்களூரில் நிசான் ஜிடி அகடமி தேர்வு முகாம்: விபரம்

டெல்லி, மும்பையை தொடர்ந்து சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நிசான் ஜிடி அகடமியின் தேர்வு முகாம் நடைபெறும் கால அட்டவணை வெளியாகியுள்ளது.

கார் பந்தய வீரராகும் வேட்கை கொண்டவர்களுக்கு ஏதுவாக இந்த முகாம்களை நிசான் ஜிடி அகடமி மேற்கொண்டு வருகிறது. வீடியோ கேம் ஆடுவதில் திறமைமிக்கவர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமையும்.

Nissan GT Academy

அடுத்த மாதம் 17 முதல் 20ந் தேதி வரை ஹைதராபாத்திலுள்ள இன்ஆர்பிட் வணிக வளாகத்திலும், மே மாதம் 15 முதல் 18ந் தேதி வரை பெங்களூரில் உள்ள மந்த்ரி மாலிலும், ஜூன் 5ந் தேதி முதல் 8ந் தேதி வரை சென்னை, ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலும் நிசான் ஜிடி அகடமியின் தேர்வு முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வு முகாமல் கலந்து கொள்பவர்கள் சிமுலேட்டர் எந்திரம் மூலம் கார் பந்தயத்தை விளையாட வேண்டும். அதில், சிறப்பாக ஆடுபவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேசிய அளவில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சில்வர்ஸ்டோனில் வைத்து முறையாக பந்தய காரை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

இதற்கான செலவுகள் அனைத்தையுமே நிசான் ஜிடி அகடமி வழங்கும். இந்த புதிய திட்டத்தின் மூலம் சிறந்த கார் பந்தய வீரர்களை உருவாக்க முடியும் என்று நிசான் ஜிடி அகடமி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
English summary
Nissan has already established their GT Academy in the UK and Germany. India is their new venue in search of talent. It is a great opportunity for people who are wanting to get into motorsport and are willing to dedicate their time.
Story first published: Saturday, March 22, 2014, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X