வீடியோ கேம் பிரியர்கள் கார் பந்தய வீரராக மாறும் வாய்ப்பு: நிசான் வழங்குகிறது

By Saravana

இந்தியாவில் வீடியோ கேம் பிரியர்கள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் ஆர்வலர்களை கார் பந்தய வீரராக மாற்றும் வகையிலான பயிற்சி மையத்தை நிசான் இன்று துவங்கியுள்ளது.

பிற பயிற்சி மையங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில் கார் பந்தய வீரர்களை உருவாக்கும் விதமாக இந்த பயிற்சி மையத்தை நிசான் திறந்துள்ளது. வீடியோ கேமில் கைகேர்ந்தவர்களை நிஜ கார் பந்தய வீரர்களாக உருவாக்கும் முயற்சியே இது. நிசான் ஜிடி அகடமி என்ற பெயரிலான இந்த புதிய பயிற்சி மையத்தில் இணைவதற்கான தகுதிகள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிமுலேட்டர் தேர்வு

சிமுலேட்டர் தேர்வு

வீடியோ கேம் தெரிந்தவர்கள் நிசான் நிறுவனத்தின் பிரபலமான கிரான் டூரிஷ்மோ 6 வீடியோ விளையாட்டை சிமுலேட்டரில் அமர்ந்து ஆட வேண்டும். அதில், சிறப்பாக ஆடி வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.

சென்னையிலும் தேர்வு

சென்னையிலும் தேர்வு

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வருபவர்களுக்கு இந்த சிமுலேட்டரில் கிரான் டூரிஷ்மோ 6 வீடியோ கேமை ஆடி தங்களது பராக்கிரமத்தை காட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுதவிர, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, குர்கான் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் இதற்கான தேர்வுகள் வரும் மாதங்களில் நடைபெற உள்ளது.

 வெற்றியாளர்கள்

வெற்றியாளர்கள்

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்களில் முதலிடத்தை பிடிக்கும் 14 பேருக்கு இங்கிலாந்தில் உள்ள கார் பந்தய பயிற்சி மையத்தில் வைத்து பயிற்சிகள் வழங்கப்படும். அதில் சிறப்பாக செயல்படுவர்கள் இறுதிச் சுற்றை எட்டும் வாய்ப்பு இருக்கிறது.

இறுதிச் சுற்று

இறுதிச் சுற்று

சர்வதேச அளவில் முதல் 18 இடங்களை பிடிப்பவர்கள் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற இருக்கும் இறுதிச் சுற்றில் நிசான் 370இசட்எஸ் மற்றும் ஜிடி ஆர்எஸ் கார்களை ஓட்டி திறனை காட்ட வேண்டும். அதில், தேர்வு பெறும் ஒரே ஒருவருக்கு மட்டும் நிசான் கார் பந்தய அணியில் இடம் நேரடியாக பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தகுதி

தகுதி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம். வீடியோ கேமில் ஆர்வமிருந்தால் எளிதாக அடுத்தடுத்த சுற்றுக்களுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

ஆன்லைனில் பதிவு

ஆன்லைனில் பதிவு

இந்த பயிற்சி மையத்தில் சேர்வதற்கு ஆன்லைனிலும் பதிவு செய்வதற்கான வசதியை விரைவில் ஏற்படுத்த உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

கார் பந்தய வீரர்கள் கவனிக்க

கார் பந்தய வீரர்கள் கவனிக்க

கார் பந்தயங்களில் தொழிற்முறையில் பந்தய வீரர்களாக இருப்பவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என நிசான் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Story first published: Tuesday, February 4, 2014, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X