உலகின் மதிப்புமிக்க பிராண்டு பட்டியலில் நிசானுக்கு முக்கிய இடம்!

By Saravana

உலகின் மதிப்புமிக்க பிராண்டுகளில் ஒன்றாக நிசான் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க நிறுவனங்களின் வரிசையில் அதிவேகமாக முன்னேறும் பிராண்டு என்ற பெருமையும் நிசானுக்கு கிடைத்துள்ளது.

உலகின் சிறந்த நிறுவனங்கள் குறித்த பட்டியலை இன்டர்பிராண்டு என்ற நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில், ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 56வது இடத்தை பெற்றிருக்கிறது.

Nissan Brand

கடந்த ஆண்டு பட்டியலில் 65வது இடத்தில் இருந்த நிசான் தற்போது 56வது இடத்திற்கு முன்னேயிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம், சிறந்த கார் மாடல்கள், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நிசான் உலகின் சிறந்த பிராண்டுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதாக இன்டர்பிராண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் நிசான் நிறுவனத்தின் உயரதிகாரி ரோயல் டி விரிஸ், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிசான் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது," என்று தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இன்டர்பிராண்டு நிறுவனத்தின் சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு பிராண்டுக்கான பட்டியலில், நிசானும் இடம்பெற்றிருந்தது. உலகின் அதிகம் விற்பனையாகும் நிசான் லீஃப் எலக்ட்ரிக் கார் மூலம் இந்த பட்டியலில் மிக முக்கிய இடத்தை நிசான் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Nissan has been named one of the world's most valuable brands for 2014, according to Interbrand, the world-leading brand consultancy. In the Best Global Brands Study, released today by Interbrand, Nissan ranked 56, up from 65 in 2013. The study cited the strength of Nissan’s financial performance, product portfolio and leadership position in electric vehicles among the drivers of the company’s brand health.
Story first published: Friday, October 10, 2014, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X