புதிய காம்பெக்ட் செடானை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

By Saravana

காம்பெக்ட் செடான் கார்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் 4 புதிய காம்பெக்ட் செடான் மாடல்கள் அறிமுமாகியுள்ளன.

இந்த நிலையில், நிசான் நிறுவனமும் காம்பெக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2016- 17ம் ஆண்டில் காம்பெக்ட் செடான் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிசானும் இடம்பெற விரும்புவதாக அந்த நிறுவனத்தின் இந்திய, ஆசிய மற்றும் மேற்காசிய நாடுகளின் வர்த்தக விவகாரங்களுக்கான உயர் அதிகாரி டோரு ஹசேகவா கூறியுள்ளார்.

நிசான் நிறுவனத்தின் வி பிளாட்ஃபார்மில், மைக்ரா காரின் அடிப்படையில், புதிய காம்பெக்ட் செடான் கார் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nissan Micra CS 2

இந்தியாவில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட புதிய காம்பெக்ட் செடான் களமிறக்குவதற்கு நிசான் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
English summary
Nissan India is planing to make sub-4 meter compact sedan based on its best selling small car Micra. Here is the few rendering photos of Micra Compact Sedan from theophiluschin.com.
Story first published: Friday, February 14, 2014, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X