இந்தியாவில் மைக்ரா, சன்னி கார்களை திரும்ப அழைக்கும் நிசான்

By Saravana

ஏர்பேக்கில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் 9,000 மைக்ரா, சன்னி கார்களை திரும்ப அழைக்க நிசான் முடிவு செய்துள்ளது.

மைக்ரா, சன்னி கார்களின் ஏர்பேக்குகளில் விரிவடையச் செய்யும் இன்ஃப்ளேட்டர் சாதனத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உலக அளவில் 2008 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட 2.6 லட்சம் கார்களை திரும்ப அழைக்க நிசான் முடிவு செய்தது.

Nissan Sunny

இதன்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 9,000 மைக்ரா மற்றும் சன்னி கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது. பிரச்னைக்குரியதாக கருதப்படும் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் சாதனம் இலவசமாக மாற்றி தரப்படும் என்று நிசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏர்பேக்குகளை ஜப்பானை சேர்ந்த தகட்டா என்ற நிறுவனம் சப்ளை செய்தது. நிசான் மட்டுமின்றி, டொயோட்டா, ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தகட்டா ஏர்பேக் பிரச்னை காரணமாக கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 Japanese car maker Nissan is recalling around 9,000 units of the India-made Micra hatchback and Sunny sedans to replace defective airbags
Story first published: Saturday, October 25, 2014, 9:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X