மேம்படுத்தப்பட்ட நிசான் சன்னி கார் அறிமுகம் - சிறப்பம்சங்கள்!

By Saravana

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நிசான் சன்னி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

தோற்றம்

தோற்றம்

முகப்பு கிரில்லுக்கு நடுவில் மூன்று குரோம் பட்டைகள் படுக்கை வாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டேம், பம்பர், ஹெட்லைட் என அனைத்தின் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 எல்இடி இண்டிகேட்டர்

எல்இடி இண்டிகேட்டர்

ரியர் வியூ கண்ணாடியில் எல்இடி இண்டிகேட்டர் லைட்டுகள், 15 இஞ்ச் அலாய் வீல்கள், டியூவல் டோன் பம்பர் என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 இன்டிரியர்

இன்டிரியர்

புதிய சென்ட்ரல் கன்சோல், அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புதிய அப்ஹோல்ஸ்டரி என இன்டிரியர் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

6.1 இஞ்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் டிவிடி பிளேயர், நேவிகேஷன் வசதிகளை பெறலாம். புளூடூத் வசதியும் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

நிசான் சன்னியில் 97.7 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 84.8 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Story first published: Thursday, February 6, 2014, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X