400 எச்பி பவர் கொண்ட புதிய எஞ்சினை அறிமுகப்படுத்திய நிசான்

By Saravana

400 எச்பி பவரை அளிக்கும் ஆற்றல் கொண்ட புதிய எஞ்சினை நிசான் அறிமுகம் செய்துள்ளது. இதிலென்ன, ஆச்சரியம் என்கிறீர்களா? ஆம். இந்த எஞ்சின் வெறும் 40 கிலோ எடை மட்டுமே கொண்டது.

புரட்சிகர தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் 380 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் அளிக்கும். இதன் எடை மட்டுமல்ல, இதன் வடிவமைப்பும் மிக அடக்கமாக இருப்பதும் ஆட்டோமொபைல் துறையினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எளிதில் கையாளும் வகையில், 500 மிமீ உயரம், 400 மிமீ நீளம், 200 மிமீ அகலம் கொண்டதாக இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இது ஃபார்முலா- 1 கார்களின் எஞ்சினை விட மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக நிசான் பெருமிதம் தெரிவித்துள்ளது.

ரேஸ் சரித்திரத்தில்...

ரேஸ் சரித்திரத்தில்...

பிரபலமான சர்வதேச மோட்டார் பந்தயம் ஒன்றில், முதல்முறையாக 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட ரேஸ் காரை நிசான் அறிமுகப்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அது எந்த கார்

அது எந்த கார்

சமீபத்தில் நிசான் அறிமுகம் செய்த குட்டி விமானம் போன்ற விசித்திரமான பானட் டிசைன் கொண்ட புதிய ZEOD RC ரேஸ் காரில்தான் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இதில், எலக்ட்ரிக் மோட்டாரும் இருக்கும். உலகின் அதிவேக ஹைபிரிட் கார்களில் ஒன்றாக நிசான் இதனை குறிப்பிடுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்புறம் குறுகிய பானட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் தற்போது தீவிர சோதனையில் இருக்கிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

ஸீரோ ஆர்சி என்ற குறியீட்டுப் பெயரில் நிசான் அழைக்கும் இந்த கார் லீ மேன்ஸ் கார் பந்தயத்தில் ஒரு சுற்றை முழுவதுமாக பேட்டரி சார்ஜில் இயங்கும் மின் மோட்டார் மூலமாகவும், மீதமுள்ள சுற்றை இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்தி முடிக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

இந்த புதிய ரேஸ் கார் மின் மோட்டாரில் இயங்கும்போது ஸீரோ எமிசன் கொண்டதாக இருக்கும். இந்த காரை ஆட்டோமொபைல் துறையினரும், ரேஸ் பிரியர்களும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
Story first published: Saturday, February 1, 2014, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X