மாருதி சியாஸ் காரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கிடையாதாம்: அதுக்கு மாருதி சொல்லும் காரணம்...!

By Saravana

எஸ்எக்ஸ்4 மிட் சைஸ் செடான் காருக்கு மாற்றாக புதிய மாடலை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. சியாஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய செடான் காரில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை கியர் பாக்ஸ் கொண்டதாக வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், மாருதி சியாஸ் காரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கிடையாது என்று மாருதி நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆட்டோகார் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அதற்கு பதிலாக சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் சியாஸ் காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.


ஈஸிடிரைவ்

ஈஸிடிரைவ்

செலிரியோ காரில் ஈஸிடிரைவ் என்ற பெயரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு அமோக ஆதரவு கிடைத்ததும் தெரிந்தது. ஆனால், மாருதி சியாஸ் காரில் அந்த டிரான்ஸ்மிஷனை பொருத்துவதை மாருதி தவிர்த்துவிட்டதாக, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆட்டோகார் செய்தி கூறுகிறது. அதற்கான காரணம்தான் திகைக்க வைக்கிறது.

பெருமை பேசிய மாருதி

பெருமை பேசிய மாருதி

நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதானதாகவும், பிற ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களைவிட விலை குறைவானதாகவும் கூறி ஏஎம்டி பற்றி மாருதி பெருமை பேசியது. ஆனால், அதே மாருதி தற்போது சியாஸ் செடான் காரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை பொருத்ததாதற்கு கூறிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இமேஜ் போய்டும்...

இமேஜ் போய்டும்...

ஆம், அது ஏழை மனிதனின் டிரான்ஸ்மிஷன் என்று ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை அந்த அதிகாரி குறிப்பிட்டதாக அந்த செய்தி கூறுகிறது. மேலும், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் பொருத்தினால் சியாஸ் காரின் இமேஜ் கெட்டுபோய்விடும் என்று மாருதி கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால், அதே நிறுவனத்தின் செலிரியோ வாங்கியவர்கள் எல்லாம் ஏழைகளா என்ற கேள்வி எழுகிறது.

 உற்பத்திக்கு தயார்

உற்பத்திக்கு தயார்

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ஆலையில் சியாஸ் செடான் காரின் உற்பத்தியை சோதனை முறையில் மாருதி செய்து பார்த்துவிட்டது. எனவே, உற்பத்திக்கு தயார் நிலையில் சியாஸ் இருக்கிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

வரும் பண்டிகை காலத்தில் புதிய மாருதி சியாஸ் செடான் கார் விற்பனைக்கு வருகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுடன் புதிய மாருதி சியாஸ் செடான் கார் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Earlier it is predicted that, Maruti Suzuki will introduce its AMT (Automated Manual Technology) in its soon-to-be-launched Ciaz sedan. But the recent reports suggest that, the carmaker will not use AMT in Ciaz. 
Story first published: Friday, May 30, 2014, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X