எதிர்காலத்தில் கார்களில் இதெல்லாம் இருக்காதாம்? - ஒரு சுவாரஸ்ய ஆய்வு

By Saravana

டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்க போட்டா போட்டி ஏற்பட்டு நிலையில், எதிர்காலத்தில் கார்களில் ஸ்டீயரிங் வீல் இருக்காது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஸ்டியூட் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் தானியங்கி வாகன தயாரிப்பு துறையை சேர்ந்த அரசு நிறுவனங்கள், பல்கலைகழக மாணவர்கள் உட்பட 200 பேர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தினர். அதில், எதிர்காலத்தில் கார்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டனர். அதில், பல சுவாரஸ்யமான தகவல்ககள் கிடைத்தன.


 என்னென்ன இருக்காது?

என்னென்ன இருக்காது?

எதிர்கால கார்களில் ஸ்டீயரிங் வீல் இருக்காது என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேக் பெடல், ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவையும் இருக்காது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 ஹாரனுக்கும் குட்பை

ஹாரனுக்கும் குட்பை

எதிர்காலத்தில் அதிக அளவில் தயாரிக்கப்படும் கார் மாடல்களில் கூட ஹாரனுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீல், ஹாரன், ரியர் வியூ மிரர், பிரேக் பெடல்கள் முதலில் கார்களிலிருந்து வழக்கொழியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

கனவு நனவாகும் காலம்...

கனவு நனவாகும் காலம்...

2030ம் ஆண்டு வாக்கில் ஹாரன், ரியர் வியூ கண்ணாடிகளின் வழக்கொழியும் என்றும், 2035ம் ஆண்டில் பிரேக் பெடல்களும், ஸ்டீயரிங் வீலும் வழக்கொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதேபோன்ற ஒரு காரின் புரோட்டோடைப் மாடலை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம்.

பிற நிறுவனங்களும்...

பிற நிறுவனங்களும்...

கூகுள் மட்டுமின்றி, நிசான், டொயோட்டா, வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தானியங்கி கார்களின் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளன. உதாரணமாக, நிசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ரியர் வியூ மிரர் என்ற சாதனம் கேமரா மூலம் எல்சிடி திரையில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதகங்கள்

பாதகங்கள்

டிரைவரில்லா கார்களை தயாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட பிரச்னைகள், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோர், இந்த கார்களை ஏற்றுக் கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் மனப்பக்குவம் உள்ளிட்ட 6 பாதகங்களை இந்த ஆய்வில் பட்டியலிடபப்பட்டுள்ளன.

 நோ ஸ்டீயரிங், நோ ஃபியரிங்

நோ ஸ்டீயரிங், நோ ஃபியரிங்

எதிர்காலத்தில் இதுபோன்ற கார்கள் அறிமுகமாகும்போது கார் ஓட்டும்போது ஏற்படும் மன அழற்சி, சோர்வால் ஏற்படும் விபத்துக்கள், சாலை விதிமீறல்கள் வெகுவாக குறையும். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற கார்களை அறிமுகம் செய்வதற்கு ஏற்ற கட்டமைப்புகள் உருவாக்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். எனவே, இப்போதைக்கு இந்திய சாலைகளில் இந்த வகை கார்கள் தடம் பதிப்பதற்கு வெகு காலம் பிடிக்கலாம்.

Most Read Articles
English summary
The phrase "Look Ma, no hands!" has literally given ideas about how future vehicles are going to be. The Institute of Electrical and Electronic Engineers (IEEE), has recently conducted a survey revealing that the cars of the future will lose a few critical elements like the steering wheel, brake pedal, rear view mirrors and even horns on mass produced vehicles. Future meaning by 2035.
Story first published: Thursday, July 17, 2014, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X