லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ்... வாயுவில் இயங்கும் பீஜோ கார்!

By Saravana

கடந்த ஆண்டு வாயுவில் ஓடும் கார் எஞ்சின் தொழில்நுட்பத்தை பிரான்சை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் வெளியிட்டது. அப்போதே உலக அளவில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில், இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய கார் மாடலை பாரிஸ் மோட்டார் ஷோவில் பீஜோ காட்சிக்கு வைக்க உள்ளது.

பீஜோவின் 208 காரில் மாறுதல்கள் செய்யப்பட்டு, "208 ஹைபிரிட் 2L டெமான்ஸ்ட்ரேட்டர்" என்ற பெயரில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த புதிய கார் மாடல் பெட்ரோல் மற்றும் அழுத்தம் கூட்டப்பட்ட வாயுவில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


செயல் விளக்க மாடல்

செயல் விளக்க மாடல்

அடுத்த மாதம் பாரிஸ் மோட்டார் ஷோவில் வைக்கப்பட இருக்கும் மாடல் தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்வதற்கான மாடலாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வர்த்தக ரீதியில் கார்களில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் மற்றும் சோதனைகளை பீஜோ கார் நிறுவனம் தீவிரமாக செய்து வருகிறது.

ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

அழுத்தம் கூட்டப்பட்ட வாயுவிலும், பெட்ரோலிலும் செல்லும் வகையில் இந்த காரின் பெட்ரோல் எஞ்சினில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விருப்பதற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் வாயுவில் செல்லும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

வேக வரம்பு

வேக வரம்பு

மணிக்கு 70 கிமீ வேகத்தில் மட்டுமே வாயுவில் செல்லும். இதனை எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும். அதற்கு மேல் வேகத்தில் செல்லும்போது பெட்ரோலில் இயங்கும் வகையில் மாறிக் கொள்ளும்.

 வாயு கொள்கலன்

வாயு கொள்கலன்

அழுத்தம் கூட்டப்பட்ட வாயு 2 சிலிண்டர்களில் இருக்கும். ஒரு சிலிண்டர் சேஸிலும் மற்றொரு சிலிண்டர் பின்புற வீல்களுக்கு இடையிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

 எமர்ஜென்சி சிலிண்டர்

எமர்ஜென்சி சிலிண்டர்

பின்புற சக்கரத்திற்கு இடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டரில் இருக்கும் வாயுவை எரிபொருள் தீர்ந்து விட்டால் அவசரத்திற்கு பயன்படுத்தலாம்.

குறைந்த சப்தம்

குறைந்த சப்தம்

வாயுவில் செல்லும்போது இந்த கார் சப்தமில்லாமல் செல்வதோடு, ஓட்டுவதற்கும் ஸ்மூத்தாக இருக்கும். கேபினும் பிரத்யேக சப்த தடுப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டது. மேலும், இது வாயுவில் இயங்கும்போது சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாது.

மைலேஜ்

மைலேஜ்

சாதாரண பாடி ஸ்டைல் கொண்ட சிட்ரோவர் சி3 மற்றும் பீஜோ 208 கார்களில் ஹைபிரிட் எரிபொருள் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 50 கிமீ வரை மைலேஜ் தருவதாக பீஜோ தெரிவிக்கிறது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

வரும் 2016ம் ஆண்டு இந்த புதிய ஹைபிரிட் ஏர் காரை மார்க்கெட்டில் விற்பனைக்கு விட பீஜோ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
The French automaker Peugeot to showcase the 208 Hybrid 2L Demonstrator car at the Paris Motor Show next month.
Story first published: Wednesday, September 17, 2014, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X