சுண்டி இழுக்கும் செர்ஜியோ பினின்ஃபரீனா கார் டிசைன்... ஆனால்?!

By Saravana

லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் பினின்ஃபரீனா செர்ஜியோ கான்செப்ட் கார் பார்வையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற டிசைனரான செர்ஜியோ பினின்ஃபரீனாவின் நினைவாக, அவரது ஸ்தாபிதம் செய்த பினின்ஃபரீனா நிறுவனத்தார் புதிய கான்செப்ட் காரை உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த 83வது ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த கான்செப்ட் கார் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது லண்டன் மாநகரிலே இந்த கான்செப்ட் கார் பார்வையாளர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்யப்பட இருந்த இந்த கார் பாதுகாப்புச் சோதனையில் வெற்றி பெறவில்லை. எனவே, இதில் சில மாற்றங்களை செய்து மீண்டும் உற்பத்தி நிலையை எட்டச் செய்வதற்கு பினின்ஃபரீனா முடிவு செய்துள்ளது.


டிசைனர் ஒப்புதல்

டிசைனர் ஒப்புதல்

பினின்ஃபரீனாவின் தலைமை டிசைனரான ஃபேபியோ ஃபிலிப்பைனி, இந்த காரில் சில மாறுதல்களை செய்ய வேண்டி வரும் என முன்பே தெரியும் என கருத்து தெரிவித்துள்ளார். விரைவில் சில மாற்றங்களை செய்து சட்டரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

ஃபெராரி 458 இட்டாலியா கார் மாடலின் அடிப்படையில்தான் புதிய கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபெராரி 458 இட்டாலியா காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4.5 லிட்டர் வி8 எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 570 எச்பி பவரை அளிக்கும். 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 320 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது.

 வைன்ட்ஷீல்டு இல்லை

வைன்ட்ஷீல்டு இல்லை

இந்த கார் பர்கெத்தா பாடி ஸ்டைல் கொண்டது. இந்த காரில் வைன்ட்ஷீல்டு மற்றும் கூரை ஆகியவை கிடையாது. பயணிகளுக்கு பாதுகாக்கும் வகையில் இதன் சி பில்லர் ரோல்பாராக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிசர் டோர்

சிசர் டோர்

ஃபெராரி 458 இட்டாலியா கார் போன்றே இந்த காரிலும் குவார்ட்டர் சிசர் கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை

விலை

ஒரு கார் 2 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக யூகச் செய்திகள் கூறுகின்றன. அடுத்த நான்கரை மாதங்களில் இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு கார் கூட உற்பத்தி செய்யப்படாததால் இந்த கார் விற்பனைக்கு வருவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

செர்ஜியோ பினின்ஃபரீனா

செர்ஜியோ பினின்ஃபரீனா

ஃபெராரி நிறுவனத்தின் 360, 328 மற்றும் ஃபெராரி எஃப்40 போன்ற பிரபல கார்களின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்தான் செர்ஜியோ பினின்ஃபரீனா. மிட் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு என்ஸோ ஃபெராரையை சமாதானப்படுத்தி வெற்றிக்கண்டார். கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 3ந் தேதி செர்ஜியோ பினின்ஃபரீனா தனது 85வது வயதில் காலமானார்.

Most Read Articles
English summary
Pininfarina Sergio Concept, is a concept car shown at the 83rd Geneva Motor Show on 2013. It is a tribute to Sergio Pininfarina. The car is now being displayed in London, as an honour to Sergio Pininfarina, who struck a famous bond with Ferrari.
Story first published: Thursday, July 17, 2014, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X