விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய போர்ஷே எஸ்யூவி!

By Saravana

இந்தியாவில் போர்ஷே மசான் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிரபலமான போர்ஷே கேயென் எஸ்யூவியின் மினி மாடலாக வர்ணிக்கப்படும் இந்த புதிய மசான் எஸ்யூவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ஷேவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த எஸ்யூவி கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஏப்ரல் முதல் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவியின் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு

முகப்பு

ஆடி க்யூ5 எஸ்யூவியின் அதே பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும், இந்த புதிய எஸ்யூவி பெரிய இடைவெளிகள் கொண்ட கிரில், சரிவான கூரை, வளைவு, நெளிவுகளுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எஞ்சின்களை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மசான் எஸ், மசான் எஸ் டீசர், மசான் டர்போ ஆகிய 3 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல், டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மாடலில் 400 பிஎஸ் பவரை அளிக்கும் வல்லமை கொண்ட வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் கடந்துவிடும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது 256 பிஎஸ் பவரை அளிக்கும் என்பதோடு, 0 -100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். போர்ஷேவின் பிடிகே டபுள் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.

விலை

விலை

ரூ.70 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது போட்டியாளர்களைவிட அதிகம் என்றாலும், ஓட்டுதல் தரம், டிசைன், வசதிகள் என பல விதங்களிலும் இது கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
The German sports car maker Porsche has shown intent to launch its sports SUV, for Indian market. They plan to launch the urban SUV in the latter half of the year. This is the same car that people call the baby Cayenne, as it looks similar to it.
Story first published: Wednesday, February 19, 2014, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X