போர்ஷே 918 ஸ்பைடர் கார்கள் விற்று தீர்ந்தது... புதிய மாடலுக்கு அச்சாரம்!

By Saravana

போர்ஷே 918 ஸ்பைடர் கார்கள் விற்று தீர்ந்து விட்ட நிலையில், புதிய மாடலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை போர்ஷே கார் நிறுவனம் துவங்கியிருக்கிறது.

போர்ஷே 918 மாடலில் 918 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக போர்ஷே கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Porsche 918 Spyder

அதிகபட்சமாக அமெரிக்காவில் 297 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதையடுத்து, சீனா மற்றும் ஜெர்மனியில் தலா 100 கார்களை விற்பனை செய்துள்ளதாக போர்ஷே தெரிவித்துள்ளது.

ஹைபிரிட் மாடலான போர்ஷே 918 ஸ்பைடர் மாடலில் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 608 எச்பி பவரை அளிக்க வல்லது. இதுதவிர, 279 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்ட இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் உண்டு. மொத்தமாக 887 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்ட மாடல் இது.

இந்திய மதிப்பில் ரூ.5.29 கோடி விலை மதிப்பு கொண்டது. போர்ஷே 918 ஸ்பைடர் கார் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், புதிய மாடலை அறிமுகம் செய்யும் முயற்சிகளை போர்ஷே துவங்கியிருக்கிறது.

Most Read Articles
English summary
German luxury carmaker Porsche, will soon come up with a successor to the 918 Spyder, after the hybrid hypercar has been officially sold out.
Story first published: Monday, December 15, 2014, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X