ரேஞ்ச்ரோவர் 'லாங்' வீல் பேஸ் மாடலை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா

டெல்லியில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் சர்வதேச கண்காட்சியில் லேண்ட்ரோவரின் அதிக வீல் பேஸ் கொண்ட புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தினார்.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த புதிய மாடலை வடிவமைத்ததாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. இந்த நீளமான மாடல் தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் அரங்கை அலங்கரித்து நிற்கிறது.

 5 மீட்டர் நீளம்

5 மீட்டர் நீளம்

5 மீட்டரை நெருங்கும் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக வீல் பேஸ் கொண்ட இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிக்கு ஆசிய மார்க்கெட்டுகளில் அதிக வரவேற்பு இருப்பதை கருதி இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடலை கொண்டு வந்து அறிமுகம் செய்துள்ளது லேண்ட்ரோவர்.

இடவசதி

இடவசதி

புதிய மாடலின் பின்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், போதிய அளவு இருக்கையை சாய்த்துக் கொள்ள முடியும்.

லெக்ரூம்

லெக்ரூம்

அதிக வீல் பேஸ் கொண்ட மாடலில் பின் இருக்கையில் 35 மிமீ வரை லெக்ரூம் கூடுதலாக இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மாடலில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 503 பிஎச்பி ஆற்றலையும், 625 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளிலும், அதிகபட்சமாக 235 கிமீ வேகத்திலும் செல்லும் வல்லமை கொண்டது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X