தண்ணீர் இல்லாமல் கார் கழுவுவதற்கான புதிய திரவம்: 'வாவ்வாஷ்' அறிமுகம்

தண்ணீர் இல்லாமல் கார் கழுவுவதற்கான விசேஷ திரவம் ஒன்றை வாவ்வாஷ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள மாருதி சர்வீஸ் மையத்தில் இந்த திரவத்தின் மகத்துவங்களை விளக்கும் வகையிலான நிகழ்ச்சி நடந்தது. அதில், மாருதி 800 கார் ஒன்றை தண்ணீர் இல்லாமல் கழுவி ஆச்சரியப்படுத்தினர் வாவ்வாஷ் நிறுவனத்தினர்.


வாவ்வாஷ்

வாவ்வாஷ்

வாவ்வாஷ் நிறுவனத்தின் விசேஷ திரவத்தை காரின் மீது ஸ்பிரே செய்து, வாவ் வாஷ் நிறுவனம் வழங்கும் பிரத்யேக துணியால் துடைத்துவிட்டால் போதும். கார் பளிச்சென மாறிவிடுகிறது. மாருதி 800 காரின் பானட்டின் மீது திரவத்தை ஸ்பிரே செய்து விட்டு ஒரு டவலால் முதலில் துடைத்தனர். பின்னர் மற்றொரு டவலால் துடைத்து உலர செய்யும்போது கார் பானட் பளபளக்கிறது.

தண்ணீர் சேமிப்பு

தண்ணீர் சேமிப்பு

ஒரு காரை கழுவுவதற்கு நவீன சர்வீஸ் மையங்களில் கூட குறைந்தது 10 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதுவே, சாதாரண சர்வீஸ் மையங்களில் ஏகத்துக்கும் வீணாக்கப்படுகிறது. வாவ் வாஷ் திரவத்தை பயன்படுத்தி காரை சுத்தப்படுத்தினால் தண்ணீரை வெகுவாக மிச்சப்படுத்த முடியும் என்று அடித்து சொல்கிறது வாவ் வாஷ் நிறுவனம்.

இதர பலன்கள்

இதர பலன்கள்

தண்ணீர் மட்டுமின்றி, நேரம், மனித ஆற்றல், மின்சாரம் என அனைத்துமே மிச்சமாகிறது என வாவ்வாஷ் தெரிவிக்கிறது. மேலும், இந்த திரவம் காருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரவத்தை மாருதி நிறுவனம் சோதனை செய்து, தனது டீலர்ஷிப்புகளில் பயன்படுத்திக் கொள்ள அங்கீகரித்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ஒரு லிட்டர் 506 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டரில் 30 கார்களை சர்வீஸ் செய்ய முடியும். மேலும், சிறிய பாட்டில்களிலும் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இதனை விற்பனை செய்ய வாவ்வாஷ் திட்டமிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு காருக்கு பளபளப்பு கொடுக்கும் விசேஷ ரசாயனக் கலவையில் இந்த சொல்யூஷன் தயாரிக்கப்படுவதாக வாவ் வாஷ் தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Mumbai-based company Wow Wash claims to have one, in what they call "WOW Wash" or "WithOut Water Wash". This product is an environmentally friendly solution that is claimed to be an alternative to using water in the top washing or car exterior washing process, with benefits like eliminating water from the said process, saving electricity, man power, man hours and additionally enhancing the gloss of the car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X