டெல்லியில் கேமரா கண்ணில் சிக்கிய புதிய மாருதி செலிரியோ!!

By Saravana

தயாரிப்பு நிலை மாருதி செலிரியோ காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. டெல்லியிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி செலிரியோவை மோட்டார்பீம் தளத்தினர் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். மாருதியின் ஏ- ஸ்டார் மற்றும் எஸ்டீலோவுக்கு மாற்றாக வர இருக்கும் இந்த புதிய காரின் தயாரிப்பு நிலை மாடல் முதல்முறையாக தற்போது கேமராக் கண்ணில் சிக்கியிருக்கிறது.

 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாருதி கார் இதுவரை ஒய்எல்7 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. சுஸுகியின் புதிய ஏ விண்ட் கான்செப்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு தயாரிப்பு நிலைக்கு மாறியிருக்கும் இந்த கார் நிச்சயம் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த படங்களின் மூலம் தெரிகிறது. இந்த காரின் ஸ்பை ஷாட் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

செலிரியோவின் டாப் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ள ZXI வேரியண்ட்டின் படங்கள்தான் வெளியாகியுள்ளன. அழகாக செதுக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட்டுகள் இரண்டு குரோம் பட்டைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பானட், தனி அறையில் கொடுக்கப்பட்டிருக்கும் பனிவிளக்குகள் என எல்லாமே கவர்ச்சியாக உள்ளன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புற டிசைனில் முக்கியமாக டெயில் லைட்டுகள் ஆல்ட்டோ 800 காரை நினைவூட்டுவது போல் இருக்கிறது. ரியர் பம்பர் சற்று பெரிதாக தெரிவதுடன், கூரையுடன் இணைக்கப்பட்ட ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

வீல் ஆர்ச் கம்பீரத்தை கூட்டுவதுடன், அதிலிருந்து துவங்கும் தடிமனான பாடி லைன்கள் பின்புறம் வரை நீள்கிறது. 6 ஸ்போக் அலாய் வீல்கள், இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

 கிளட்ச்லெஸ் டிரான்ஸ்மிஷன்
 

கிளட்ச்லெஸ் டிரான்ஸ்மிஷன்

இந்த காரின் மிக முக்கியமாக அம்சமாக புதிய கிளட்ச் இல்லாமல் வரும் மேனுவல் கியர் பாக்ஸ் அமைப்பை கூறலாம். இது நகர்ப்புற நெரிசலுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

67 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Motorbeam

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X