யூஸ்டு மாருதி வேகன் ஆர் காரின் சாதக, பாதகங்கள்

பிரச்னையில்லாமல் பட்ஜெட் விலையில் கிடைக்கும் யூஸ்டு கார்களில் மாருதி வேகன் ஆர் காரும் ஒன்று. கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் வேகன் ஆர் கார் அதிக பிரச்னைகள் இல்லாததே அந்த காரின் வெற்றிக்கு முக்கிய விஷயம். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே உரிமையாளரிடம் ஓடும் வேகன் ஆர் கார்கள் ஏராளம்.

சிறந்த பராமரிப்பில் இருக்கும் வேகன் ஆர் கார்களுக்கு யூஸ்டு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருக்கிறது. மேலும், அதிக ஹெட்ரூம் கொண்ட கார் என்பதால் உயரமானவர்களுக்கும் சட்டென பிடித்து போகிறது. இந்த நிலையில், பட்ஜெட் விலையில் யூஸ்டு கார் வாங்குபவர்களுக்கான தேர்வு பட்டியலில் வேகன் ஆர் காருக்கும் முக்கிய இடம் உண்டு. பயன்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.


 கச்சிதமான கார்

கச்சிதமான கார்

பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் 3 ஆண்டுகள் ஓடிய காரை வாங்க சொல்வது வழக்கம். அந்த விதி வேகன் ஆர் காருக்கும் பொருந்தும். டால்பாய் டிசைன், கச்சிதமான டிசைன், பார்க்கிங் எளிது, பெண்களுக்கும் எளிதாக ஓட்ட முடியும் என்று பல சாதகமான காரணங்கள் பயன்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை வாங்குவதற்காக அடுக்கலாம். சிறிய குடும்பத்திற்கு ஏற்ற கார் மாடல். இருப்பினும், குறைகளை முக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில், பயன்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பழைய வேகன் ஆர் மாடலில் பொருத்தப்பட்டிருந்த 1.1 லிட்டர் எஞ்சின் பிரச்னைகள் குறைவானது. சரியான இடைவெளிகளில் ஆயில் மாற்றியிருந்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்பதுடன், மிகச்சிறந்த மைலேஜையும் வழங்கும். ஆனால், ஒரு லட்சம் கிமீ.,க்கும் மேல் ஓடிய வேகன் ஆர் கார்களில் டைமிங் பெல்ட் மாற்ற வேண்டியிருக்கும். ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை சர்வீஸ் புக்கில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஏதேனும் வித்தியாசமான க்ரீச் சப்தம் வருகிறதா என்பதை பார்த்து இதனை கண்டுபிடிக்கலாம். வால்வுகள் தேய்மானம் ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு சப்தம் வரும். ஆனால், இதனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். மேலும், ஐட்லிங்கில் கார் எஞ்சின் சீராக இயங்குகிறதா என்பதை பார்க்கவும். அதில், ஏற்ற, இறக்கமாக சப்தம் வந்தால், இ.சி.யூ.,வில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

கே- சீரிஸ் எஞ்சின்

கே- சீரிஸ் எஞ்சின்

2010ம் ஆண்டு 3 சிலிண்டர் 1.0 லிட்டர் கே- சீரிஸ் எஞ்சின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது. மேலும், இந்த மாடல் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் வருவதால், அந்த கிட்டுகள் அவ்வப்போது பரிசோதனை செய்துள்ளார்களா என்பதையும் தெரிந்துகொள்ளவும்.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பழைய வேகன் ஆர் மாடலில் மிக முக்கிய பிரச்னையாக கூறப்படுவது சஸ்பென்ஷன் பிரச்னை. குறிப்பாக, முன்பக்க சஸ்பென்ஷனில் பிரச்னை ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு அதிக செலவு பிடிக்காது என்பதையும் மனதில் வையுங்கள். டிரைவ் சாஃப்ட் வளைந்துள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அது கட் ஆகி ஆயில் கசிய வாய்ப்புள்ளது. காரின் ஸ்டீயரிங் வீலை வளைத்துக் கொண்டு காரை நகர்த்தினால் கிளிக் சவுண்ட் வந்தால், டிரைவ் சாஃப்ட்டை மாற்ற வேண்டும்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

வேகன் ஆர் காரில் மிகவும் இலகுவான கிளட்ச் அமைப்பு கொண்டது. நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டின்போது சீக்கிரமே தேய்ந்துபோகும். கியர் ஷிப்ட் கேபிள் அல்லது கிளட்ச்சை மாற்ற வேண்டியிருக்கும். மெக்கானிக்கை கொண்டு இந்த பிரச்னை குறித்து பார்த்துக் கொள்ளவும்.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

நீண்ட காலம் ஓடிய வேகன் ஆர் கார்களில் பம்பர்கள் கடகடத்து போயிருக்கு. பம்பர் கிளிப்புகள் கழன்று இதுபோன்று ஆகிவிடும். புதிய கிளிப்புகளை போட்டு சரிசெய்து கொள்ளலாம். ஒயரிங், சுவிட்சுகள் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த காரில் ஏசி., சிறப்பாக இல்லை என்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.

 வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

பழைய வேகன் கார் வாங்கும்போது பட்ஜெட்டை பொறுத்து முடிவு செய்யவும். அதேநேரத்தில் 1.50 லட்ம் கிமீ.,க்கு மேல் ஓடிய வேகன் ஆர் கார்களை வாங்குவதை தவிர்க்கவும். அதற்கு மேல் எஞ்சினில் பிரச்னைகள் அதிகம் வரலாம்.

 தோராய விலை

தோராய விலை

தோராய விலை

மாடல் 2007-2008: ரூ. 1.75 லட்சம் - ரூ.2 லட்சம்

மாடல் 2009-2010: ரூ.2.25 லட்சம் - ரூ.3 லட்சம்

மாடல் 2011-2013: ரூ. 3.25 லட்சம் - ரூ.4 லட்சம்

வேரியண்ட்டுகளை பொறுத்தும், வசதிகளை பொறுத்தம் விலை மாறுபடலாம். இங்கே தோராய விலை விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Here are given some pros and cons about used Maruti Wagon r car. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X