ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து அரசியின் உயரிய விருது!

By Saravana

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் சார்பில் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய - இங்கிலாந்து இடையே வர்த்தக மற்றும் கலாச்சார உறவை மேம்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தமைக்காக நைட் கிராண்ட் கிராஸ் என்ற விருது நேற்று நடந்த விழாவில் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.

Ratan Tata

மேலும், இரு நாட்டு இளம் தொழில் அதிபர்களுக்கு ரத்தன் டாடா முன்மாதிரியானவர் என்றும், அவரது தொலைநோக்கு பார்வை, செயல்திறன் ஆகியவை குறித்து விருது வழங்கும் விழாவில் இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பெவன் புகழாரம் சூட்டினார்.

இங்கிலாந்தின் உற்பத்தி துறையில் அதிக தொழிலாளர்கள் கொண்ட நிறுவனமாக டாடா குழுமம் திகழ்கிறது. உப்பு, தேயிலை மற்றும் கார் தயாரிப்பு துறை என பல்வேறு துறைகளில் அங்கு டாடா குழுமம் நேரடியாக 60,000 தொழிலாளர்களை கொண்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்களிலும் டாடா குழுமம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்து பேரரசின் சார்பில் நைட் கமாண்டர் என்ற விருது ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது நினைவுகூறதக்கது.

Most Read Articles
English summary
Ratan Tata, Chairman emeritus of Tata Group, was awarded the Knight Grand Cross of the Order of the British Empire (GBE) on Monday.
Story first published: Wednesday, May 7, 2014, 8:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X