ரெனோ டஸ்ட்டரின் மில்லியன் சாதனை: ஒரு பார்வை

By Saravana

பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகளில் விற்பனையில் ஒரு மில்லியன் என்ற மாபெரும் விற்பனையை கடந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. டிசைன், எஞ்சின், இடவசதி என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்த டஸ்ட்டர் எஸ்யூவி குறுகிய காலத்தில் இந்த புதிய மைல்கல்லை எட்டுவதற்கான காரணங்கள்.

பிரான்ஸ் கார் நிறுவனமான ரெனோவும், அதன் அங்கமாக செயல்படும் ரோமானியாவை சேர்ந்த டேஸியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய டஸ்ட்டர் இன்று இந்தியா உள்பட உலகின் ஏராளமான நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. உலக கார் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக தன்னையும் இணைத்து கொண்டிருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவி பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

முதல் தரிசனம்

முதல் தரிசனம்

2009ம் ஆண்டு நவம்பரில் ஆன்ட்ரோஸ் டிராபிக்காக டஸ்ட்டரின் ஐஸ் ரேஸிங் மாடலாக வடிவமைக்கப்பட்ட டஸ்ட்டர் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் உற்பத்தி நிலை மாடல் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனை துவக்கம்

விற்பனை துவக்கம்

கடந்த 2010ம் ஆண்டு ஜெனீவா மோட்டார்ஸ் ஷோவில் டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லோகன் கார் பிளாட்ஃபார்மில் சான்டேரோவுக்கு அடுத்ததாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மூன்றாவது கார் மாடல் டஸ்ட்டர்.

வடிவம்

வடிவம்

டஸ்ட்டர் எஸ்யூவி 4.31 மீ நீளமும், 1.82 மீ அகலமும், 2,673 மிமீ வீல் பேஸ் மற்றும் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதில், 475 லிட்டர் பூட் ரூம் கொண்டது. பின் இருக்கையை மடக்கும்போது பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 1,600 லிட்டர் வரை கூட்டிக் கொள்ள முடியும்.

நிசான் 4 வீல் டிரைவ் சிஸ்டம்

நிசான் 4 வீல் டிரைவ் சிஸ்டம்

டஸ்ட்டர் எஸ்யூவி 2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் குறிப்பிட்ட மார்க்கெட்டுகளில் 4 வீல் டிரைவ் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. டஸ்ட்டர் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலில் நிசான் நிறுவனத்தின் 3 விதமான டிரைவிங் ஆப்ஷன்களை வழங்கும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ரெனோ மற்றும் டேஸியா பிராண்டுகளின் விற்பனையில் பெரும் பங்களிப்பை அளித்து வரும் டஸ்ட்டருக்கு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களால் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தவிர்த்து கொள்வதற்காக கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் டஸ்ட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யபப்பட்டது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.6 லிட்டர் பெட்ரோல், 1.6 லிட்டர் பெட்ரோல்/எத்தனால், 1.6 லிட்டர் எல்பிஜி, 2.0 லி பெட்ரோல், 2.0 லி பெட்ரோல்/எத்தனால் ஆகிய பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. இதுதவிர, 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் கொண்டதாகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடல் இரு விதமான பவர் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

கிராஷ் டெஸ்ட்

கிராஷ் டெஸ்ட்

2011ல் யூரோ என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 3 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

உற்பத்தி

உற்பத்தி

சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனோ - நிசான் கூட்டணி ஆலை உட்பட உலகின் 5 இடங்களில் உள்ள ஆலைகளில் டஸ்ட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து வலது பக்க டிரைவிங் கொண்ட பல்வேறு நாடுகளுக்கு டஸ்ட்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய மார்க்கெட்

இந்திய மார்க்கெட்

உலக அளவில் டஸ்ட்டருக்கு 4வது முக்கிய மார்க்கெட்டாக டஸ்ட்டர் விளங்குகிறது. மேலும், ரெனோவின் கூட்டணி நிறுவனமான நிசான் பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்யப்பட்டு டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

இந்தியாவில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், டஸ்ட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்தியாவுக்கு வர இருக்கிறது.

விருதுகள்

விருதுகள்

கடந்த 2013ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் மாடல் விருதை டஸ்ட்டர் பெற்றது. இதுதவிர, இந்தியாவின் பல்வேறு பிரபலமான ஆட்டோமொபைல் விருதுகளையும் டஸ்ட்டர் பெற்றிருக்கிறது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலும், ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Story first published: Tuesday, April 15, 2014, 9:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X