அடுத்த மாதம் வரும் 4 வீல் டிரைவ் டஸ்ட்டர்: சிறப்பம்சங்கள் பார்வை

By Saravana

அடுத்த மாதம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடல் மூலம் விற்பனையில் சிறிது வளர்ச்சியை பெற்றுவிட ரெனோ இலக்கு வைத்திருக்கிறது.

சென்னையில் உள்ள ரெனோ- நிசான் ஆலையில் ஏற்கனவே 4 வீல் டிரைவ் கொண்ட டஸ்ட்டர் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்திய மண்ணிலும் 4 வீல் டிரைவ் டஸ்ட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ரெனோ. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

டஸ்ட்டரின் 110 பிஎஸ் டீசல் மாடலில் மட்டுமே 4 வீல் டிரைவ் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 248 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

4 வீல் டிரைவ் திருகு

4 வீல் டிரைவ் திருகு

சென்ட்ரல் கன்சோலில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களை இயக்குவதற்கான திருகு கொடுக்கப்பட்டிருக்கும்.

 ஏற்றுமதி மாடல்

ஏற்றுமதி மாடல்

இங்கிலாந்துக்கு டேஸியா பிராண்டில் 110 பிஎஸ் கொண்ட 4 வீல் டிரைவ் டஸ்ட்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே மாடலை ரெனோ பிராண்டில் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. எனவே, உற்பத்தி செலவீனத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

 4 வீல் டிரைவ் அம்சங்கள்

4 வீல் டிரைவ் அம்சங்கள்

டஸ்ட்டர் 4 வீல் டிரைவ் மாடல் 2H, 4H மற்றும் 2H ஆட்டோ ஆகிய டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கும். 2H என்பது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை செயல்படுத்தும் ஆப்ஷன். 4H என்பது 4 வீல் டிரைவ் ஹை டிரைவ் சிஸ்டமாக செயல்படும். 4H ஆட்டோ என்ற ஆப்ஷன் ஸ்டான்-பை மோடாக செயல்படும். அதாவது, சக்கரங்கள் வழுக்கும்போது தானியங்கி முறையில் இவை 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை இயக்கும்.

 இது இருக்காது

இது இருக்காது

மஹிந்திரா தார் எஸ்யூவி மற்றும் மாருதி ஜிப்ஸி 4 வீல் டிரைவ் மாடல்களில் இருக்கும் லோ பாறைகளில் வழுக்காமல் தவழ்ந்து முன்னேறுவதற்கும், சேறு, சகதிகளில் எளிதாக முண்டி வர பயன்படும் லோ ரேஷியோ கிராவ்ல் டிரைவ் சிஸ்டம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

 விலை

விலை

தற்போது விற்பனையில் இருக்கும் 110 பிஎஸ் டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டைவிட ரூ.1 லட்சம் கூடுதலான விலையில் வரும் என தெரிகிறது. அதாவது, ரூ.13 லட்சம் விலையில் இந்தியாவில் புதிய டஸ்ட்டர் 4 வீல் டிரைவ் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
French car maker Renault is planning to launch Duster 4WD model in India by next month. The New Duster 4X4 110 PS SUV is expected to be priced a a little shy of 13 lakh rupee mark. Here are given some important features and specifications of Duster 4WD.
Story first published: Friday, August 1, 2014, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X