இந்தியாவில் வெளுத்துக் கட்டிய ரெனோ டஸ்ட்டர்: விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது

By Saravana

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான டஸ்ட்டர் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரெனோ டஸ்ட்டர் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரும் வரை அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாகவும் விளங்கியது.

Reno Duster

இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் ஒரு லட்சம் டஸ்ட்டர் எஸ்யூவிகளை ரெனோ விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி கூறுகையில்," இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டஸ்ட்டர் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளோம்.

இது எங்களுக்கு மிகுந்த பெருமையையும், ஸ்திரமான வர்த்தகத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. ஏனெனில், மாருதி, ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் இந்தளவு விற்பனையில் சாதித்தால் பெரிய விஷயமில்லை. ஆனால், ஒரு எஸ்யூவி மாடல் இந்தளவுக்கு விற்பனையில் சாதித்துள்ளதை நினைத்து பெருமையாக இருக்கிறது," என்று கூறினார்.

போட்டியை சமாளித்து டஸ்ட்டரின் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் சமீபத்தில் 85 பிஎஸ் பவர் டீசல் மாடலிலும் அட்வென்ச்சர் என்ற ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டர் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், டஸ்ட்டரின் மார்க்கெட் நிலையாக செல்லும் என்று ரெனோ கருதுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டர் எஸ்யூவியும் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுதவிர, ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
As per a statement by Sumit Sawhney, Renault India CEO and Managing Director, the company has sold over 1 lakh Duster compact SUVs in little less than 2 years since launch, which is definitely a good number for any car that's not a hatchback from Maruti Suzuki or Hyundai.
 
Story first published: Tuesday, June 3, 2014, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X