நாளை மறுதினம் விற்பனைக்கு வருகிறது டஸ்ட்டர் AWD மாடல்!

By Saravana

பெரும் ஆவலுக்கு மத்தியில் நாளை மறுதினம் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஆல் வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டஸ்ட்டர் AWD என்ற பெயரில் வரும் இந்த புதிய மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.


டஸ்ட்டர் AWD

டஸ்ட்டர் AWD

எலக்ட்ரானிக் கன்ட்ரோல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் டஸ்ட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வெளிப்புறம்

வெளிப்புறம்

ஸ்மோக்டு ஹெட்லைட், கன் மெட்டல் ஃபினிஷ் அலாய் வீல்கள், AWD டீகெல்கள் போன்றவை சிறப்பம்சங்களாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசனில் இருக்கும் சில இன்டிரியர் அம்சங்களை ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு ரெனோ பயன்படுதத்தியுள்ளது. 3 பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல், சிவப்பு மற்றும் சாம்பல் நிற அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல் ஆகியவை இந்த மாடலின் சிறப்பம்சங்களாக இருக்கும். டேஷ்போர்ட் பீஜ் நிறத்திற்கு பதிலாக சாம்பல் நிறம் கொடுக்கப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ டஸ்ட்டர் AWD மாடலில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 109 பிஎச்பி பவரையும், 248 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலின் ஆர்இசட்எக்ஸ் டாப் வேரியண்ட்டில் டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், டெம்பரச்சர் கேஜ், சேட்டிலைட் நேவிகேஷன் போன்றவை இருக்கும். 2 டின் ஆடியோ சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டியூவல் ஏர்பேக்ஸ் போன்றவற்றுடன் வருகிறது.

விலை

விலை

2 வீல் டிரைவ் மாடலைவிட ரூ.1 லட்சம் வரை கூடுதலான விலையில் டஸ்ட்டர் 4 வீல் டிரைவ் மாடல் வர இருக்கிறது.

Most Read Articles
English summary
French carmaker Renault India will launch the new Duster AWD (All-Wheel-Drive) on September 24. The new Renault Duster AWD will boost some cosmetic upgrades inside and outside. 
Story first published: Monday, September 22, 2014, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X