ஈக்கோஸ்போர்ட்டுக்கு எதிராக புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் ரெனோ!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு எதிராக புதிய மினி எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் KWID என்ற கான்செப்ட் கிராஸ்ஓவர் மாடலை ரெனோ காட்சிக்கு வைத்திருந்தது நினைவிருக்கலாம். அதனை தயாரிப்பு நிலை மாடலாக வெளியிட ரெனோ முடிவெடுத்துள்ளதாம். இது மினி எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மாதிரி படம்

மாதிரி படம்

ரெனோ KWID கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலையில் எப்படியிருக்கும் என்பதன் மாதிரி படத்தை ஆட்டோஎக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளோம்.

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் KWID மினி கிராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பாவிற்கு வெளியே முதல்முறையாக ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடல் இது.

பரபரப்பு

பரபரப்பு

KWID கான்செப்ட் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது உள்ளிட்ட தகவல்களை ரெனோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் ஈக்கோஸ்போர்ட்டுக்கு எதிராக புதிய எஸ்யூவியை ரெனோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது KWID கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலாகத்தான் இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

4 மீட்டர் எஸ்யூவி

4 மீட்டர் எஸ்யூவி

இந்த புதிய எஸ்யூவி மாடல் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டிருக்கும் என்பதால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டிருந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், அதில் ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் கொண்டிருந்தது. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் ரெனோ ட்விங்கோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 900சிசி எஞ்சின் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தவிர, ரெனோவின் பெயர்பெற்ற 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

இரட்டை வண்ண கலவையில் வித்தியாசமான டிசைனில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ KWID கான்செப்ட் வசீகரித்தது. இந்த நிலையில், இதே பெயரில் தயாரிப்பு நிலை மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் 2016ம் ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் மார்க்கெட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Renault Kwid was an eye-catching concept, with an attention grabbing design that was conceived for the Delhi Auto Expo earlier this year. The Kwid was a significant model for Renault because it was the first concept specifically developed for an emerging Market like India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X