விரைவில் ரெனோ லாட்ஜி... எர்டிகா, மொபிலியோவைவிட அதிக இடவசதி!

By Saravana

இந்தியாவின் எம்பிவி மார்க்கெட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போட்டி நிலவுகிறது. மாருதி எர்டிகாவின் விற்பனை எண்ணிக்கையை கண்டு பிற கார் நிறுவனங்களும் இந்த செக்மென்ட்டில் ஓர் சிறந்த மாடலை நிலைநிறுத்த முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா புதிய மொபிலியோ எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. வந்த முதல் மாதத்திலேயே எர்டிகாவை ஓரங்கட்டியது. இந்தநிலையில், அடுத்ததாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம் புதிய எம்பிவி காரை களமிறக்குகிறது. லாட்ஜி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எம்பிவி கார் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


 சாலைச் சோதனைகள்

சாலைச் சோதனைகள்

தற்போது ரெனோ லாட்ஜி எம்பிவி காரை இந்திய மண்ணில் வைத்து பல்வேறு சாலைச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதையடுத்து, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படும்.

தாராள இடவசதி

தாராள இடவசதி

மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்ட இந்த புதிய லாட்ஜி எம்பிவி கார் 2.8 மீட்டர் நீளம் வீல் பேஸ் கொண்டது. எனவே, எர்டிகா, மொபிலியோ கார்களைவிட மிகவும் தாராள இடவசதியை வழங்கும். குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கை சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் இந்த புதிய எம்பிவி காரிலும் பொருத்தப்பட இருக்கிறது. இது 85 பிஎச்பி பவரை அளிக்கும். 110 பிஎச்பி பவர் கொண்ட மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

விலை

விலை

மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு இடையிலான விலையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. டஸ்ட்டரின் பல பாகங்களை இந்த புதிய எம்பிவி கார் பகிர்ந்து கொள்ள இருப்பதால், உற்பத்தி செலவீனத்தில் மிச்சப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனோ- நிசான் ஆலையில் இந்த புதிய லாட்ஜி எம்பிவி கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.


Most Read Articles
English summary

 The Renault Lodgy is all set to join the MPV race in India and take on the Maruti Ertiga and Honda Mobilio when it goes on sale in January 2015.
Story first published: Wednesday, October 1, 2014, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X